அ , இ , உ என்பன சுட்டுக்கள். இவற்றிலிருந்து அது, இது உது என்பனவும் அவை, இவை, உவை என்னும் அவற்றின் பன்மை வடிவங்களும் தோன்றின.
மொழியில் உது, உவை என்பன இருப்பினும், நாம் அவற்றைப் பயன்படுத்துவதில்லை; அதற்கான இயல்பான வாய்ப்பும் ஏற்படுவதில்லை.
அ , இ , உ என்பன பல சொற்களுக்குத் தாயானவை. இவற்றுள் "உ" மிகப்பல சொற்களுக்குத் தாய். உ - ஒரு மக்களைப் பெற்ற மகராசி.
காலை முன் எழுவித்து ஒரு பொருளை சற்று கடினமாகத் தொட்டால், உது என்பதிலிருந்து உதை என்ற சொல் பிறந்து, அச்செயலைக் குறிக்கின்றது.
பிற மொழிகள் பெரும்பாலும் தமிழ்ச் சொல்லின் இரண்டாம் 3எழுத்தை முதலாக்கி அதிலிருந்து சொற்களைப் படைத்துக்கொள்கின்றன.
எடுத்துக்காட்டு:
உது > உதை (தமிழ் ) பேச்சு வழக்கு : உத - ஓத
உதை > ஒத > த > தி(ண்டாங்) (மலாய்)..
You have to make a research into many similar words to ascertain what is ("ண்") ("டாங்")
அரு > அருமை (தமிழ்)
அரு> ரேர் ( rare) ஆங்கிலம். "re" is hardly pronounced or not stressed.
இப்படிப் பல முன் காட்டியுள்ளேன். அறிஞர் பிறரும் எடுத்துக்காட்டியுள்ளனர்.
சரி, இப்போது உதயம் என்ற சொல்லுக்கு வருவோம்.
உ (முன்னிலை )
உது > உத > உதயம் . (முன் னெழுதல்)
பல்லாயிரம் ஆண்டுகள் மொழிகள் தனித்தனி வளர்ச்சி கண்டு உருப்பெற்றதனால், சொற்களின் ஒற்றுமை குன்றியும் வேற்றுமை விரிந்துமே காணப்பெறும். தொடர்நோக்கின் (prolonged and focused examination) பயனாகவே உண்மை உணரலாகும்.