திங்கள், 31 மார்ச், 2014

தேகம்

தேகம்  என்ற சொல்லுக்குத் தமிழில் யாக்கை,  உடம்பு , மேனி  என்றெல்லாம் பல சொற்கள் கிடைக்கின்றன.  தேக, (தேகம்) என்பது தமிழன்று  எனப்படினும் அதை இப்போது நுணுகி ஆய்வு செய்வோம்.

குழந்தை பிறந்தபின் அது வளர்ந்து ஆளாகிறது.   அதுவரை  அது வளர்பிறையும் பின் முழு நிலவும்போல் நிலவுகின்றது.  இந்த நிலையில் குழந்தையின்  உடம்புக்கு  ஒரு புதிய சொல்லை உருவாக்கி அமைப்பதானால்
"வளர்கம்" என்று  ஒரு சொல் தரலாம்.  வளர்+கு+அம்  என்று !! இந்த வளர் நிலையைக் குறிக்கும் பெயர் எதுவும் "உடம்பு"  என்னும் பொருள்படத்  தமிழில் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
(பெண்ணின் பருவப் பெயர்களைக் குறிப்பிடவில்லை )

மனிதனின் கவலையெல்லாம் வளர்ச்சியில் இல்லை. வளர்ச்சி யடைந்தபின் அது தேய்ந்து அழியாமல் இருக்க வேண்டுமென்பதிலேயே சென்றது தெரிகிறது. ஞான்  (நான் ) மற்றும் நீ (கடவுள்) என்றுணர்ந்த ஞானியரும் இந்த எண்ணத்தால் பீடிக்கப்பட்டு  --" தேய்வதும் அழிவதும் உடைய உடல் -  இது  ,மெய்யன்று  பொய் !  " என்று உடல் நடபடிக்கைகளிலிருந்து ஒதுங்கினர்.

இதனால் தேய்தல் கருத்திலிருந்து உடலுக்கொரு சொல் அமைந்தது.

தேய் + கு+ அம்  = தேய்கம் > தேகம்.  (தேய்ந்து அழிதலுடையது )  --  தேக .

தேகத்திற்கு அழிவே இல்லையென்றால்,  அதைப் பற்றி மனிதன் கவலையே படாமலிருந்  திருந்தால்  மதங்கள் தோன்றி வளர்ந்திருக்க மாட்டா. 

இது நல்ல  சொல்தான்.  இப்போது தேய்பிறைபோல் தேகம் தேய்ந்து ஒழியும் என்று இந்தச்  சொல்லைப்  பார்த்து அல்லது கேட்டு யாரும் எண்ணிக்கொள்வதில்லை.  தேய்தல் என்ற சொல்லின் தாக்கம் ஏதுமில்லாத இடங்களிலும் இச்சொல் வழங்கியதால்,  கருத்தில் தடையும் அதனால் அதைத் தள்ளுபடியாக்கும் உணர்வும் இன்றி  உடல் நலம்  நாடுமிடங்களிலும்  அது இது காறும் வழங்கி வந்துள்ளது.  மூலங்கள் கிடக்கும் தமிழிலும் எப்போதாவதுதான் பயன்பட்டது.

தேகம் என்ற சொல்லின் உருவாக்கப் பொருளை (etymological meaning )இராமலிங்க அடிகள் நன்கு உணர்ந்திருந்தார் என்று தோன்றுகிறது.  "உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உன்னை மறவேன்" என்று பாடியமை நோக்கற்பாலது.  தேக அழிவின் வெவ்வேறு கட்டங்களை பட்டினத்தடிகள் நன்கு படம்பிடித்தளிப்பது  போல "ஒரு மடமாதும் ஒருவனும் ஆகி " என்ற பாட்டில் தெரிவிக்கிறார். 

யரல  வழள ஒற்றுக்களை அடுத்து வல்லினம்  வந்தால், ஒற்றுகள் மறைதலும்  வேறு திரிபுகள் தோன்றுதலு  முண்டு என்பதும் என் முன் இடுகைகளைக் கவனித்தால் நன்கு புரியும்.

வாய் >  வாய்த்தி >  வாத்தி > வாத்தியார். (one who uses his mouth to teach). இன்னும் விரிந்த விளக்கம் இதற்குத் தேவைப் படலாம். But I avoid it at this juncture.
உய்  >  உய்த்தி >  உத்தி. 

உபாத்தியாயார் என்ற சொல் பற்றிப்  பின் கருதலாம்.

தே+கு+அம் = தேகம்  என்று கண்டோம் .  ஒப்பீடு:  மே+கு+அம்  = மேகம் . இவை இரு விகுதிகள் பெற்றமைந்தன. கு விகுதி  வினைச் சொல்லாக்கத்திலும் வரும்.  மூழ்  >  மூழ்கு .  அழு >   அழுகு . ஏ  > ஏகு .  பெரு  > பெருகு .

தேகம் சமஸ்கிருதத்திற்காக தமிழர்  வடிவமைத்த சொல் ,   . The root of the word is in Tamil. 


குறிப்பு 

நாகர் >  நாயர்    இது    பேராசிரியர் கணபதிப்   பிள்ளை ( இலங்கை ) உள்ளிட்ட  ஆசிரியர் பலர்   கருத்தாகும்      நாயர் :   ,இவர்கள் நாக வணக்கம்  செய்தோர்  என்ப,     ய ,<> க  திரிபு  நோக்குக ht  In his book  Tamils 1800 Years Ago  Author  Kanagasabaip Pillar discusses on  Nair word derivation.  You may wish to read more..

நேயம்  >  நேகம் >  ஸ் - நேகம்   என்னும் திரிபும் உணர்க .   ய >க   


மேனன் மேனோன் சொல்லாக்கங்கள்

மேல் என்பதினின்று மேனன் வரை என்பதில் சொல்லாக்கங்கள் சிலவற்றைக் கண்டோம். மேனோன்  என்பதுமதே!

கேரளம் (<சேரலம் ) சற்று விரிந்த கடலெல்லை கொண்ட  நாடு  (இப்போது  மாநிலம்).  அரபு தேயத்திலிருந்து வந்த வணிகர் குழுக்களிடத்து வேலைக்கமர்ந்த உள் நாட்டினரைக்  கண்காணிக்க . மேல்பார்க்க மற்றும் கணக்கெழுத  எழுதப் படிக்கத் தெரிந்த  உள் நாட்டினரே நேமிக்கப் பட்டனர். இவர்கள்  (ஒவ்வொருவரும் )   மேலோன்  என்றழைக்கப் பட்டனர்.   இச்சொல்லே மேனோன் என்று முறைப்படி திரிந்தது.

லகர னகரத் திரிபுகள் இயல்பானவை.  (என் பல இடுகைகளையும் படித்து இன்புறுங் காலை ஒரு குறிப்புப் புத்தகத்தில் பட்டியலிட்டுக் கொண்டால் பின் ஐயம் எழாது.)

மேனன் என்பது மேலன் என்பதன் திரிபே.

மேனன் என்பது பின் ஒரு சாதியாய் முகிழ்த்து எழுந்தது.  ஒவ்வொரு தொழிலில்  ஈடுபட்ட குழுவினரும் ஒரு சாதியினராய் மாறியது இந்தியாவெங்கும் காணலாகும் ஒன்று.    பஞ்சாபு மானிலத்தில் தண்ணீர் தூக்கி வீடு வீடாகக் கொண்டு கொடுத்தவர்கள் தண்ணீர் தூக்கிச் சாதி யானது போல.   (water carriers)

மெனா என்பது ஒரு  சமஸ்கிருதச் சொல்.  இது பெண்,   பெண்விலங்கு    மற்றும்  பேச்சு என்றெல்லாம்   பொருள் தரக்கூடியது.   இதிலிருந்து சொல் அமைய வாய்ப்பில்லை . இதை விவரிக்க (விரித்து வரிகள் செய்ய) முற்படவில்லை.












ஞாயிறு, 30 மார்ச், 2014

மேலிலிருந்து மேனோன்வரை

இப்போது "மேல்" என்பதனோடு தொடர்புடைய சில சொற்களைக் கவனித்தின்புறுவோம் வாருங்கள்.
மே   >  மேல்,   அல்லது   மேல் > மே
மே ‍>  மேகம்  (வானத்தில் மேலே ஊர்ந்து செல்வது).  (மே+கு+அம்).

பழந்தமிழ் நூல்களில் இது பெரிதும் வழக்குப்பெறாதொழிந்தது  எனினும் பேச்சு மொழியில் இன்றுகாறும் நிலவுகிறது. தமிழினோடு தொடர்புடைய பிற அண்டை மொழிகளிலும் வழங்குவதாகும்மே என்ற அடிச்சொல் இருக்கும்போது அது தமிழன்று என்று எங்ஙனம் தீர்மானித்தனர் தமிழாசிரியர்நமக்குக் கிடைத்த தமிழ் நூல்கள் (சங்க இலக்கியங்கள் முதலியவை ) சிலவேசில ங்கப்  புலவர் பேரால் ஒன்றிரண்டே பாடல்கள் கிடைத்துள்ளன.
வாழ்நாள் முழுமைக்கும்  இரண்டே பாடல்கள் தாம் பாடினாரா? ‍‍என்றால்    ஆயிரம்    இரண்டாயிரம்  பாடியிருப்பார்நம்  கைக்கு வந்தவை  இரண்டுதாம் என்றுதான்  பதில் சொல்ல வேண்டியிருக்கும்.    பல ஒழிந்தன.

எனவே எழுதப்பட்ட நூல்களில்  இல்லாதவை தமிழன்று  என்று எளிதில் முடிவு கட்டமுடியாது.

சில   பேச்சு வழக்குச் சொற்கள் -- 


மேல் என்பது பேச்சில் உடம்பையும் குறிக்கும்.

"மேலிலெல்லாம் கொப்புளமாக உள்ளது" என்பர்இதில் மேல் = உடம்பு.

மேல் > (மேலி ) > மேனி.   லகரம்  னகரமாய் மாறும்மேலி என்ற இடைப்பட்ட  சொல் மறைந்தது.

மேனி மினுக்கி =  >  மேனாமினுக்கி.

மேல என்ற சொல் தொல்காப்பியத்தில் மேன என்று வந்துள்ளது.

மேலோன் ‍  >  மேனோன்

இனி மேனோன்,(1) மேனன் பற்றி அடுத்த இடுகையில்  தொடர்வோம்.

editing is reserved.