ஞாயிறு, 16 மார்ச், 2014

ஆனந்தம்

வீட்டுக்கு ஒரு ஆ(பசு)வாவது இருக்கவேண்டும். இருந்துவிட்டால், பால், வெண்ணெய், தயிர்,மோர் என்றிவற்றுக்கெல்லாம் ஒரு குறைவுமிருக்காது. ஆம்!  அதுவும் தம் சொந்த ஆவாக இருந்தால் அதுவே எல்லையில்லாத மகிழ்ச்சி ஆகும்.

ஆவைக் கண்டால் மகிழ்ச்சி. அதன் பாலை உண்டால் மகிழ்ச்சி. தயிர்ச்சாதம் அன்னை தந்தால் மகிழ்ச்சி. தண்ணீர் தவிக்கும்போது மோர் கிடைத்தால் மகிழ்ச்சி. தம் ஆ எனில் அழகு!  அழகு!

அந்த அழகே மகிழ்வு!

தம் ஆன்  அம்.  தம்= சொந்த ; ஆன் = ஆ; பசு;  அம் ‍=  அழகு.

இதை,    ஆன்+ அம்   +  தம்  எனில் ஆனந்தம் ஆகிறது.

ஒரு வாக்கியமே  வார்த்தையானது.  ஒரு  சொற்றொடரே சொல்லானது.

இப்படி அமைந்தவை பிற மொழிகளிலும் உள்ளன.  எல்லாமே பகுதியும் விகுதியும் இடைச்சாரியையுமாய் அமைதல் இல்லை.

அம்  அழகு என்று பொருள் கொள்ளாமல்  அம்  - தாய்  என்றாலும் பொருந்துவதே . .....  என்றால்,  ஆவைத்  தாயெனப் போற்றி மகிழ்ந்து,  அம்மகிழ்வு  "ஆனந்த ' மாயிற்று  என்று கூறுதற்கும் இடமுண்டு.  மேலும் இதனின் முந்திய இடுகையில் "அம் "  விளக்கம்பட்டுள்ளதும் காண்க

"தம்" என்ற்பாலது "தமது" எனப் பொருள் தருதல் மட்டுமின்றி, ஒரு விகுதி போலவும் இச்சொல்லில் புனைவு பெற்றுள்ளது. A dual function for "tham"..தம்  என்பது முன்னொட்டாகவும் பின்னோட்டாகவும் பெற்ற சொற்கள் பலவாம்.

கோகுலத்துள்  எழுந்த சொற்களில் இதுவுமொன்று.

இந்தியாவெங்கும் தமிழர் வாழ்ந்தனர்.(1) அவர்களின் சொல் யாண்டும் பரவியது.
=======================================================================
Notes:
(1)  நாராயண  ஐயங்கார் இன்னும்  பிறரும்.

 (2) வட இந்தியாவிலிருந்து  திராவிடர் தென்னாட்டிற்கு விரட்டியடிக்கப்பட்டனர்  என்று இன்னும் பலர் நம்புவதால், அவர்கள் மொழி எங்கும் பரவியிருந்தது என்பது தெளிவாகும்.
திராவிடர் என்பதே  "விரட்டியடிக்கப்பட்டவர்கள்"  என்று பொருள்படும் என்கிறார்கள்.


சனி, 15 மார்ச், 2014

"அம்" அமைப்பு

தமிழில் பல விகுதிகள் அல்லது சொல்லீறுகள் பொருளிழந்து வெறும் சொல்லமைப்புக்காக அல்லது   சொற்களை வேறுபடுத்துவதற்காகப் பயன்படும் துணுக்குகள் என்பது  ஓரளவு உண்மையென்றாலும் அதுவே முழு உண்மை என்று கூறிவிட முடியாது.

அணிமை, அண்மை. அருமை.அறியாமை என்றெல்லாம் வரும் பல சொற்களை ஆய்வு செய்த அறிஞர்கள்  அவற்றில் வரும் "மை" விகுதி உண்மையில் "மெய் "  என்பதன் திரிபு என்றனர்.  மெய் எனின் உடல். அது அப்புறம் "மை "  ஆகிவிட்டது.(1)

அது "மை" ஆனபின் சொல்லமைப்பு மேற்கொள்வதற்கு மனத்தில் ஏதும் தடை தோன்றுவதில்லை. வேண்டியவர் விழைந்தபடி சொற்களை அமைக்கும் வசதி  உண்டானது போலும்.  தனிமை, தன்மை இனிமை. ஆளுமை என்றெல்லாம் பேசுவோர்க்கும்  எழுதுவோர்க்கும் அமைத்துக்கொள்ள திறந்த வெளி  உருவாயிற்று.

 இனிமை + தமிழ் =  இன்+ தமிழ் = இன்றமிழ்.  இது இனிதாய் அமைந்த சொல்.
இனிய தமிழ் என்று பொருள்,    (2)  "இளைஞருக்கான இன்றமிழ் " ஒரு நூலின் பெயர்.  இதை  வேறொன்றன் தொடர்பில்  வேறு வழியில் "இனிமைத் தமிழ்" என்றால் நன்றாக இருக்கும் என்றும் அறிஞர் (3) பின் கருதினர்.  ஆனால். பவணந்தி முனிவர் "மை" விகுதி கெடுத்துப் புணர்க்க வேண்டுமென்று விதி செய்தார். (4)  எனவே "இன்றமிழ் " என்பதுதான் அவர்க்குப் பொருந்திய  வடிவம்.  எதுவும் தவறன்று.  எனினும்  "மை" என்பது ஒரு பொருளைக் குறிக்கையில் அதைக் கெடுத்துப் புணத்துதல் கூடாது.  கண் மை தருக  என்பதை கண்தருக  என்றால் எப்படி?  இங்கு மை விகுதியன்று.

இணையம், கணையம் என்றெல்லாம் வரும்பல சொற்களில்  அம் விகுதி சேர்கின்றது.

"அம்"  என்பது முன் காலத்தில் அமைப்பு என்று பொருள்தரும் ஓர்  ஈறு எனலாம்.  அமைப்பு என்பதன் அடிச்சொல் அதுவேயாகும்.

அம்  > அமை .
அம்  > அமுக்கு.
அம்  > அமிழ்
அம்  >  அமர்   (விரும்பு )
அம்  > அமர்தல்
அம்  > அமர்த்து
அம்  > அமர்ப்பித்தல் (> சமர்ப்பித்தல்)
அம்  > அம்மி
அம்  > அம்பு  

etc. etc

In all these words,you can see that a dynamic force seems to be acting on a static force    .

 அம்  அழகு என்றும் பொருள்.  சீன மொழியில் மரியாதைக்குரிய பாட்டி என்றும் பொருள்.

அம்  விகுதி தமிழ் மொழிக்குப் பொருத்தமானது ;  சமஸ்கிருதத்திற்கு  இன்றியமையாததன்று.  அப்ஹிதம் , அபாலம்  என சொற்களில் வருமெனினும்  வேதா  யோகா என அம் இல்லாமலே  ஆகும்.

Notes:

(1)  மு.வரதராசனார் , (2)  நிறைதமிழாய்ந்த   மறைமலையடிகளார்.

  (3)  பாரதிதாசன்.  (4)  நன்னூல் (இலக்கணம்).

இன்று+ அமிழ் = இன்றமிழ் என்றும் வரும்.  "இன்றைக்கு  மூழ்கிவிடு" என்றும் பொருள் தருமேனும் இடம் நோக்கிப் பொருள் கொள்ளல் வேண்டும்.

இன் = இனிமை;   இன்னா  =  துன்பம் தருகிற,  தருவன  , இனிமை இல்லாத(வை), .


வெள்ளி, 14 மார்ச், 2014

மோட்சம்

மோட்சம்

மலையாளத்தில் பேச்சு வழக்கில் "மேல்" என்பதை "மோள் " என்பர்.   மேல்  - >
மேலுலகைக் குறிக்கும் மோட்சம் என்பது இந்தப்  பேச்சு வழக்குச் சொல்லினின்றும் திரிந்ததாகும்,


எப்படி என்று கவனிப்போம்."
மோள் + சு  + அம் =  மோட்சம்.  ("மோக்ஷ" :  " ம்"  இல்லை  )  'இம் "  முடன்  முடிவது தமிழ் மரபு .


பல சொற்களில் சு விகுதி உள்ளது,  எ‍-டு:  பரிசு.

து விகுதியும் சு என்று திரியும். எ‍‍‍-டு:  பெரிது > பெரிசு, (பேச்சு வழக்கில்).) ஆனால் இது "சு" விகுதி அன்றெனலாம். காரணம் அது தன்னிலையாய் எழாதது . மனம்> ??மனது> ??மனசு என்றும் காண்கிறோம் ஆயினும் இவை  (??)தவறான திரிபுகள் என்பர். அது நிற்க.

தவறான திரிபுகளும்  ஓர்  உண்மையைப் புலப்படுத்தக்கூடும்.


சு விகுதியுடன் அம் சேர்ந்தமைந்த  சொல்லே மோட்சம் என்பது.  மிக்க நேர்த்தியுடன் தான் அமைந்துள்ளது.

மோட்ச‌ என்று  அழுத்தாமல்,  மோக்ஷ என்று மெலிக்கப்பட்டதும் ஒரு திறமைதான்.  இத்தகைய அழுத்தம் raGgarATchandas என்பதில் கிடைக்கிறது!

மோட்சம் ஒரு திராவிட மூலம் உ டைய சொல்.


=======================================================================
Note:

மேடு > மோடு > மோட்டுவளை ??  மே > மோ  .

மோட்சம் -  முஸியதே  என்ற சமஸ்கிருதச் சொல்லின் திரிபு என்பர்.  mucyate (Sanskritमुच्यते)[12] appears, which means to be set free or release - such as of a horse from its harness
மோள் + சு +அம்  இன்னும் அணுக்கமாய் உள்ளது.  முஸியதெ என்பதும் "முற்றியதே !"  என்பதனோடு ஒலியணிமை உடையது!

சொற்களை 'வனைந்த'  பாமரர்  முனிவர்களைப் போல ஆழ்ந்து சிந்தித்து அமைக்க இயலாதவர். அல்லது  முயலாதவர்."செத்து மேலே போய்விட்டார்" என்பதே அவர்கள் இயல்பாய்க்  கூறும்  வாயுதிர்வு  ஆகும்.

ற்றி > பத்தி>  பக்தி.
முற்றி > முத்தி > முக்தி.
விழுபற்று > விபத்து   .