சனி, 8 மார்ச், 2014

ஆரோக்கியம்

ஆரோக்கியம்  என்பது தமிழா?

 ஆர்தல்  =  நிறைதல்.

வளமார் தமிழ் -  இங்கு வரும் ஆர் என்பது "நிறைந்த" என்று பொருள் தருவது.
ஆர் என்பது ஓர்  இன்தமிழ்ச் சொல்.

"ஊக்குதல்"  "ஊக்குவித்தல்" என்பவை எல்லாம் என்ன?   ஊக்கப் படுத்துதல் என்று பொருள் .  அழகு தமிழே.

ஆர  என்றால் ?

நெடு நாள் பிரிந்திருந்த நண்பர்கள் தாம் எதிர்கொண்டபொழுது ஆரத் தழுவிக் கொண்டனர்.

இங்கு ஆர என்பது  எச்ச  வினை. It modifies the word தழுவிக் கொண்டனர்.  முழுமைபெறத்  தழுவிக்கொண்டனர்  என்பது.

இப்போது ஆர  ஊக்கிய என்ற இரு சொற்களை இணைத்தால் என்னாகும்?.

Now you choose which result you wish:

1.  ஆரவூக்கிய. (வகர உடம்படு மெய் பெற்றுப் புணர்ந்தது.)

2.  ஆரயூக்கிய  ( யகர உடம்படுமெய் போட்டிருக்கிறோம். முதலாம் புணர்வை விட கொஞ்சம் மோசமாகத் தோன்றுகிறது.)

3. ஆரோக்கிய -   இது  இப்போது காணப்படும் வடிவம்.

இந்தச் சொல்லைப் புணர்த்தியமைத்தோன் ஒரு  தமிழனாக இருக்கவேண்டும்.  இல்லையென்றால் இவ்விரு "ஆர  ஊக்கிய: " என்பவற்றை அவன் அறிந்திருத்தல் அருமையே.

ஆர  ஓங்கிய என்ற சொற்கள் "ஓக்கிய" என்றும் வந்திருக்கலாம் என்று வாதிடலாம்.  (.வலித்தல்)  I would say it is a possibility but not a probability.

உடலுக்கு ஊக்கம் தரும் நிலையைக் குறிப்பதால், ஊக்கிய என்பதே பொருந்துவது.  ஊக்கு > ஊக்கிய.  ஊக்கு > ஊக்கம்.

பெரும்பாலும்   சமஸ்கிருதச்  சொற்களின் புணர்ச்சியில்தான்  ர + ஊ  என்பது "ரோ" என்று திரியும் என்பது உண்மைதான். ஆனால் தமிழிலும் எப்போதாவது (ஒரோவழி )  இப்படி வரும் என்பர் தமிழ்ப்புலவோர்.

சொல் திரிபுற்ற விதம் கண்டு வெறுத்து அது தமிழ் அன்று என்பர் தமிழாசிரியர் பலர்.

மூலச் சொற்கள் - ஆர , ஊக்கு(தல்)  - தமிழ். இவற்றைக்கொண்டு ஆக்கிய இச்சொல் தமிழா? 

முடிவு:  உங்களுடையது!


வெள்ளி, 7 மார்ச், 2014

சிலாக்கியம்

சிலாக்கியம் என்ற சொல்லுக்குப் பாராட்டத்தக்கது, சிறப்பானது  எனப் பல அர்த்தங்கள் உள்ளன. இது பழம் ஐரோப்பிய மொழிக்கு  உரியதாகத் தெரியவில்லை.சொல்லின்  ஒலியிலிருந்து அது தென்னாட்டுச்  சொல் என்று  புரியும்.

இதை இப்போது சற்று நுணுகி ஆய்வு செய்யலாம்.

செல் > செல்ல > செல  >  சில  (மக்களிடத்துச் சென்று புகழ்பெறுமாறு )
ஆக்கிய >  செய்யப்பட்ட , உருவாக்கப்பட்ட
அம்  -   இறுதி  நிலை அல்லது விகுதி.

செல + ஆக்கிய + அம் .

செல + ஆக்கிய + அம் =  செலாக்கியம் > சிலாக்கியம்.

செந்தூரம் >  சிந்தூரம் என்ற திரிபோடு ஒப்பிடலாம்.

சில  (few)   என்று பொருள்தரும் சொல் வேறு.


குறிப்பு: 

செல்+ஆக்கு+இயம்  = செலாக்கியம்  > சிலாக்கியம் எனினும் ஒக்கும் என்பதறிக. லகரம் இரட்டித்துப் பின் மறைவதாகக் கொண்டாலும்  அஃ தே.  செ என்ற்பாலது சி ஆனதே இதில் முக்கியமான திரிபு ஆகும். The other changes are not substantial.  


புதன், 5 மார்ச், 2014

பக்கொடா !!

உளுந்துவடை ("உளுந்தவடை") அல்லது மெதுவடை என்பது நம் வடை வகைகளுள் ஒன்று. குளம்பி நீர் (coffee) அல்லது கொழுந்து நீர் (tea)  குடிக்கும்போது கடிக்க மிக்கச் சுவையாய் இருக்கும். இந்த மெது வடைக்குப் பக்கத்தில் கடித்துச்  சுவைக்கும் பொருட்டு கடின "வடை" ஒன்று வைக்கப்பட்டது.  அதைப் பக்கவடை என்றனர்.  பார்ப்பதற்கு வடைபோன்று  இல்லாமலும் ஓருருவில் இல்லாமலும் இருக்கும் பலகாரம் அது.

பக்கவடை > பக்கவடா > பக்கொடா  !!
(வடைக்குப் பக்கத்தில் வைப்பதற்குரிய பலகாரம் )

இப்போது யாரும்  பக்கவடை என்று சொல்வதில்லை என்று நினைக்கிறேன்.. பக்கொடா, பக்கடா என்றுதான் சொல்கிறார்கள்.

வடு >  வட்டம்  (டகரம்  இரட்டித்தது.)   வடு+அம் .
வடு >  வடை    (டகரம்  இரட்டிக்கவில்லை)  வடு+ ஐ .

சொல்லமைப்பில் இருவகையிலும்  இயலும்.

Please read through my various posts in the past where I have adverted to this in word-building.  Make a list for yourselves for your own reference.

வேங்கடம் : இங்கு  கடம் என்ற சொல் (கடு+அம்  ) -  இரட்டிக்கவில்லை.(  கட+ அம் என்பர் சிலர்.)