செவ்வாய், 3 ஜூலை, 2012

Nandan PaNan conversation poem MY REPLY:

கவலைஒன் றில்லை நெஞ்சில்
கடவுளைக் கடைந்து கண்டால்,
தவலையுள்* தயிரை மத்தால்
தவறாமல் ஆய்ச்சி போலே; 
துவளுறும் துன்ப வாழ்வில்
துறக்கமே காணும் பாதை
சவளறத் தந்த ஐயர்
சாந்துணை ஏத்தத் தக்கார்.


அன்றுள நந்தன் பாணன்

ஆயவர் பேசிக் கொண்டார்
நன்றிவை சொன்ன பாங்கு
நான்மிகப் புகழ்ந்து சொல்வேன்;
ஒன்றது தெய்வம்; மாலும்
உயர்சிவ னாரும் என்ற
தென்றிசை மேலோர் வாய்மை
தெளிவுற நீவிர் சொன்னீர்.



My internet  senior friend  Suda wrote a imaginative poem, in which Nandan and PaNan had a conversation. It was quite interesting. I wrote, this  stanza in appreciation of the poem.  8th November 2010, 07:29 PM

அவல்.




"அவலாகு ஒன்றோ மிகையாகு ஒன்றோ" என்பது ஔவையாரின்  பாடல் வரிகள். புறம் 187

(இப்பாடலையும் அதன் பொருள் விளக்கத்தையும் இந்த  முன் இடுகையில் காண்க:   Pl see April 2012 collections. for this poem by Avvaiyar,  -> below   )

அவல் என்பது மலைப்பாங்கான இடத்துக்கு எதிரான பொருளில் இப்பாடலில் வருகிறது. மலை என்ற சொல்லுக்கு மடுவு என்பதுபோலவும், மேடு என்பதற்குப் பள்ளம் என்பது போலவும் எதிராக உள்ளது.

அரிசியிலிருந்து செய்யப்படும் அவல் என்பது வேறு.

அழு > ஆழ் > ஆழம்.
அழு > ஆழ் > ஆழ்தல்.
அழு > அழுந்து.
அழு > அழுந்து  > அழுந்துதல்.
அழு > அழுவம்.

  azuvam 1. depth; 2. pit; 3. deep sea; 4. expanse; 5. jungle, forest; 6. country, district; 7. battle; 8. middle; 9. abundance, copiousness; 10. greatness, excellence; 11. fortress

அழு > ( அழுவல் ) > அவல்.

எனவே, "ழு" இடைக்குறைந்து, அவலாயிற்று

இதில், அழுவம் என்பதனோடு ஒப்பிட்டு, அழுவல் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இனி, அழு  > அழுவு > அவு >  அவல் என்றும் இதனை உணர்ந்துகொள்ளலாம்.

திங்கள், 2 ஜூலை, 2012

Sivamala on Sanskrit cited,

Urban Dictionary.com citing Sivamala on Sanskrit.

You may read this article:

http://www.urbandictionary.com/define.php?term=sanskrit&defid=2459636,

" ..that between the languages of Southern India and those of the Aryan family there are many deeply seated and radical affinities; that the differences between the Dravidian tongues and the Aryan are not as great as that between the Celtic for instance and the Sanskrit. "

----G.U.Pope