வேய்ங்குழல் நாதம் தாங்கியே வீசும்
வீங்கிள வேனில் தருதென்றல்
விண்ணிலும் மண்ணிலும் விரிந்திடும் தண்ணருள்
பண்ணினைத் தந்தவன் கண்ணனவன்.
ஒரு நண்பர், கண்ணனைப் பற்றிச் சில வரிகள் தரும்படி வேண்டினார். அவருக்காக.....
I am happy that he cheered up after reading these lines.
சின்னக்கண் அழகன் என்றால்
சீனனைச் சொல்ல வேண்டும்.
என்பக்கம் சிரிக்கும் போதில்
இமை மூடிக் கண்மறைக்கும்.
வெளிறிய மஞ்சள் மேனி
வேண்டுமோ குளிக்க மஞ்சள்?
உளறிய அசை ஒவ் வொன்றுக்கும்
உட்பொருள் வாஞ்சை கெஞ்சும்.
விளம்பரத் தந்திரங்கள்.
தன்பற்றியே யாரும்
பேசும்படி செய்தோன்,
பண்பட்டு உயர் தன்விளம்பரத்தின்
விண்தொட்டோன்!
சிக்கினோன் அன்னோன் எனப்பட்டால்
சிக்கினோன் அன்னவனோ?
மற்றோரோ
யார்?
குறிப்பு: பண்பட்டு உயர் தன்விளம்பரம் = மிகவும் பண்பட்ட அல்லது
வளர்ச்சி முற்றிய நிலையடைந்த சுயவிளம்பரத் தந்திரத்தைக் குறிக்கிறது
இத்தொடர். அவன் பண்பட்டானோ இல்லையோ, அது பண்பட்டுவிட்டதென்பது கருத்து.