செவ்வாய், 2 நவம்பர், 2010

Deepalvali greetings to all

ஆகும் சீரென்றால் ஆசீர் அதுவாகும்
நோகும் யாதேனும் நும்மை அணுகாமல்
பாகும் செந்தேனும் பாயும் சுடர்வாழ்வை
நேகும் நீர்மைதீர் தீப ஒளிதருமே

நேகும் -மென்மையாகி ஒடியும். நீர்மை - தன்மை.
தீர் -தீர்க்கின்ற.

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

பறையர்க்குக் காவியம் பாடிய கவிராயர்

This is in praise of writer Sudhama of forumhub, who writes on "PaRaiyen". Knowledgeable on Saivath ThirumuRai.

பறையர்க்குக் காவியம் பாடிய கவிராயர்
இறைவர்க்குத் தம்வாழ்வு சூடிய புவிவாணர்
நிறைவரோ நானிலம் வாடிடும் நிலைகண்டே
உறைவரே நெஞ்சமே உழைப்போர் துயர்விண்டே!

சனி, 30 அக்டோபர், 2010

nandhan and paNan in swarga

ஈனத்துள் வீழ்ந்தவன் ப..யன் - இங்கே
இனிஒரு வாழ்விலை என்றழும் குறையன்;
வானத்துள் தூக்கினன் இறைவன் -- அருள்
வைப்பகம் வைத்தனன் நந்தனை, அறைவீர்!


பாவத்தில் ஆழ்குழிப் பாணர் -- குலப்
பாழ்வழித் தோன்றலை, வாழ்கலை வாணன்
தேயத்தில் யாரும்கொண் டேத்த -- அருள்
தேட்டத்தை ஏற்றுப்பொன் தோட்டத்தில் சேர்த்தான்.

இறைவனும் ஏற்றார் இவர்கள் -- இங்கு
இணையறு பற்றினுக் கிருக்குமோ சுவர்கள்?
குறைதலும் இலாச்சுவை தொடர்வீர் --- என்றும்
கோடுதல் இலாமொழி கொண்டணி படர்வீர்


வாழ்கலைவாணன் = திருமால்; இறைவன். தேட்டம்= சம்பாதிப்பு. பொன் தோட்டம் = சுவர்க்கம். குறைதலும் = குறைவதும் முற்றும் இலாதொழிதலும் உள்ளடங்க, உம்மை வந்தது.