வியாழன், 28 அக்டோபர், 2010

my poems and other writings

My poems and other writings are also available at http://bishyamala.wordpress.com/.
But they are not duplicated here.

You are cordially invited to visit me at both blogs.

SIVAMAALAA.

வெள்ளி, 22 அக்டோபர், 2010

குழந்தை

குட்டி - குழந்தை

குட்டியை மாந்தன் குழந்தைக்கே ஒப்பிட்டுக்
குட்டியெனும் சொல்லாலே கூறினீர் --- மட்டிலாத்
தாயின் பெருமையைத் தக்க படிசொன்னீர்
காயும் கனியாம் தரம்.

கனியாம் = கனியாகும். தரம் = தகுதி, நிலை.

தாயன்றி யார்?

தாயன்றி யார்?


பிறர்தயை இல்லாநற் பெற்றியில் வாழ
குறைமயல் இல்லாத குட்டி -- நிறைவளர்ச்சி
நேரிற் பெறவேண்டும், நேடவிது கற்பிக்கப்
பாரிதனில் தாயன்றி யார்?

பெற்றி = தன்மை; குறை மயல் =அறிவுமயக்கமாகிய குறை.; அல்லது குறையும் மயக்கமும். நேரில் பெறவேண்டும் = பல இன்னல்களையடைந்து அறிந்துகொள்ளாமல், நேரடியாய்த் தாயிடமிருந்து கற்றுகொள்ளவேண்டும். நேட = சிந்தித்தால் .


நிறைவளர்ச்சி = உடல் வளர்ச்சி மட்டுமின்றிப் பிற வளர்ச்சியையும் குறிக்கிறது.