கேதாரம் என்பது 29-வது மேளகர்த்தா இராகம் என்பர். இது ஆரோகணத்தில் மத்திமம் ஒழுங்கு மாறி வருவதனால், இந்த ஒழுங்குமாற்றம் ''கேடு'' என்ற சொல்லால் அறியப்படுகிறது. தமிழ் இலக்கணத்திலும் விடுபாடுகளைக் கேடு, கெட்டது என்ற சொற்களால்தாம் குறிப்பிடுவர். எடுத்துக்காட்டாக என்னில் என்ற சொல் எனில் என்று வரின், னகர ஒற்றுக் கெட்டது என்று சொல்வர். எதையும் விடாமல் தொகுக்க முடியாதாகையினால், இதைக் கெடு என்ற வினை சரியாகவே குறிக்கிறது. தொகை (தொகுத்தல்) என்பதும் அது. புலவர்கள் பாடியவை பல இருந்திருக்கலாம். நானூறு பாட்டுகள் தாம் வேண்டின் பலவற்றை விடவேண்டியதாகிறது. பல நூறுகளை விட்டிருக்கலாம். இல்லாவிட்டால் தொகுக்கமுடியாது. எட்டுத்தொகை நூல்கள் அவ்வாறு தொகுக்கப்பட்டவைதாம். ஆனால் விடப்பட்டவை கெட்டவை என்பது பொருளன்று. விடுபாடு என்பதே இங்குப் பொருளாகும்.
கேடு+ தாரம் > கே+ தாரம் > கேதாரம்.
தரு+ அம் > தாரம், அதாவது விடற்பாலவற்றை விட்டு மிஞ்சியவை தருதல். இது முதனிலை நீண்ட தொழிற்பெயர்.
கேது என்பது ஒரு நிழற்கிரகம். ஒளி கெட்டமையால், கேடு+ து > கேது எனப் பெயர் ஏற்பட்டது. கேடு என்ற முழுச்சொல்லில் டுகரம் விடுபாடு ஆனதனால், இதை இலக்கணத்தில் கடைக்குறை என்பர்.
இதுபோலும் எழுத்துக் கெட்ட செற்களை, பழைய இடுகைகளைப் படித்துப் பட்டியலிட்டுக் கொள்க.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக