தமிழுக்கும் ''வடமொழி''க்கும் உள்ள அணுக்கத் தொடர்பினை அறிந்துகொள்ள அட்சரம் என்ற சொல்லும் சான்று பகரும்.. இதில் எனக்கு ஓர் ஐயப்பாடும் இல்லை,
எழுத்துக்களை உண்டாக்கிய பின் இலக்கண ஆசிரியர்கள் இவ் வெழுத்துக்களின் தொகுப்புக்கு ஒரு பெயர் வைத்தனர். சில விதிகளின்படி எழுத்துக்கள் சரமாக அடுக்கிவைக்கப் பட்டன. இந்த விதிகளை இன்னொரு நாள் காண்போம். சமஸ்கிருதத்துக்கு இந்த வேலையைச் செய்த பெரும்புலவர் பாணினி என்பவர்.
சரம் என்ற சொல் முறையாக என்று பொருள் தரும். அடு என்பது அடுக்கப்பட்டதைக் குறிக்கிறது.
அடு சரம் > அடுசரம் , இதில் அடு என்பதை அட் என்று குறுக்கியது மட்டுமே இங்குச் சொல்லமைப்பு. அடு சரம் > அட்சரம் ஆகியது, இது இவரின் சிறந்த சொல்லாக்கத் திறனை எடுத்தியம்புகிறது என்பது தெளிவு.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக