இந்தக் கவிதை, இன்று உருப்பெற்றதுதான். ஓர் வெள்ளுருக்குக் கரண்டியில் ( stainless steel spoon ) ஓடிக்கொண்டிருந்த எறும்பைக் கண்டு கவிதை எழுந்தது. அதன் நிலைக்கு இரங்கியதே காரணம். கவிதை கடினமற்ற பதங்களில் அமைந்த படியால், விளக்கம் விரிக்கவேண்டாம் என்று நினைக்கின்றோம்.
வடையின் மணமிருக்கு --- ஆனால்
வடையைக் காணவில்லை;
தடயம் அறிஎறும்பு ---- கரண்டியில்
தள்ளாடி அலைகிறதே!
வடையின் துணுக்கொன்றையே ---எறும்பும்
அடையக் கொடுத்திடுவாய்.
கடைக்கு வடைவாங்கவே ---- பாவம்
கட்டெறும் பேறிடுமோ?
எல்லா உயிருடனும் ---- தம்பி
இயலும் நண்புகொள்வாய்,
இல்லை எனா உலகில் --- எறும்பும்
ஏற்றம் காணட்டுமே.
எவ்வுயிர் என்றாலுமே ---- துன்பம்
ஏறி வருந்துகையில்,
இவ்வுயிர் எனதுமட்டும் ---- மகிழ்ந்தே
இருந்திடல் பொருந்துவதோ..
------ சிவமாலா.
கொடுத்த சிறு துகளை இழுத்துக்கொண்டு அந்த எறும்பு
நகர்ந்து நகர்ந்து காணாமற் போய்விட்டது ஆனந்தமே.
ஆனந்தம் : ஆக நன்று > ஆ நன் து அம் > ஆனந்தம்.
நன்று = நன் + து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக