புதன், 15 பிப்ரவரி, 2023

ஆட்சேபம்

  இன்று ஆட்சேபம் என்ற சொல்லமைந்த விதத்தை அறிந்துகொள்வோம். இது ஓர் இனிய தமிழ்ச்சொல் ஆகும்.


இந்தச் சொல்லை ஆராய்ந்தால், மன்னர்கள் படைக்கு ஆட்சேர்க்குங்கால்,  மக்களிடையே ஒரு வித எதிர்ப்புணர்வு தோன்றி இம்முயற்சிக்கு எதிராக நின்றமை அறியலாகும். தப்புவதற்கு எளிதான முறை யாதென்றால், சேர்க்க வருகிறவர்கள் அறிமுகம் இல்லாதவர்களாய் இருப்பின், தேடமாட்டார்கள் என்ற தெளிவினால், ஓடிப்போவதுதான். இன்றும் கூட தடுப்பூசி போடவருகிறவர்களைச் சந்திக்காமல் ஓடிப்போகும் சிற்றூர்வாசிகளும் இருக்கிறார்கள். அகப்பட்டபின் சேரமுடியாது என்பவர்கள்  துன்புறுத்தப்படுவதுண்டு என்றும் தெரிகிறது.


இந்நடப்பிலிருந்து " ஆட்சேர்ப்பு"  >  ஆட்சேர்ப்பம் >  ஆட்சேபம் என்ற சொல் அமைகிறது.


ரகர ஒற்றுக்கள் மறைவது இயல்பு. வருகிறார்கள் என்பது வாராங்க என்று மாறிவிடுவதிலிருந்தே இதை உணர்ந்துகொள்ளலாம்.  ~றார்கள் என்பது ~ராங்க  என்று மாறிவிடுகிறாது.  அது இன்னும் திரிந்து  ~ராக என்றுமாகிறது.  ~ராவ என்பதை ஒட்டியும் திரியும்.  வரு என்பது வர் என்று வரண்டுவிடுதல் காண்க.


திரிதல்   " இயல்பாக" நடைபெறுவது.  ஆகவே,   சேர்ப்பம் என்பது சேபம் என்றும் திரியும்.  இஃது இடைக்குறைதான். இது மறுப்பு என்ற பொருளைத் தருவதால்,  பொருள்திரிபும் ஆகும்.


அறிக மகிழ்க..

மெய்ப்பு பின்னர்.

கருத்துகள் இல்லை: