உந்துவண்டி ஏறியே ஒய்யார மாயமர்ந்து
தந்தையுடன் சுற்றுவேன் பந்துபோல் ---- வந்த
சிறுநகைச் சீரால் மயக்கிவிரல் சுட்ட
ஒருநகர் முற்றும் வசம்'
தொங்கிருக்கை ஊஞ்சலில் தோய்ந்துநான் பேரரசி
இங்கிருக்க ஏற்றிலார் யாவருண்டு ---- நன்குநோக்காச்
செல்வார் திரும்ப வருவார்தம் கையசைக்கக்
கொள்வார்மெல் வாஞ்சையென் பால்.
உந்துவண்டி - ( கார்).
சிறுநகை - புன்னகை
சுட்ட - காட்ட (சுட்டிக்காட்ட)
நன்கு நோக்கா - நல்லபடி பார்க்காத
செல்வார் - கடந்து போகிறவர்
வருவார் - (குழந்தை இருக்குமிடம் தாண்டிச் செல்ல)
வருபவர்
கையசைக்க - (குழந்தையைக் கண்டு) தம்
கரங்களை ஆட்ட
மெல் - மென்மையான
என் பால் - என் மேல்
வாஞ்சை - அன்பு
எங்கள் பதிவில் தலைப்பில் ஊர்பார்க்க என்பது மேலேற்றுத்
திரையில் உர் பார்க்க என்று தெரிகிறது. இதைச்
சரிசெய்ய முடியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக