ஏகலைவன் என்ற மகாபாரதச் சொல்லை இப்போது ஆய்வுசெய்வோம்.
எய் = அம்பு எய்தல்.
எய் > ஏ இது முதனிலை திரிந்த பெயர்ச்சொல். இங்ஙனம் நீட்சி அடைகையில் யகர ஒற்று, கெட்டது. (அதாவது, மறைந்தது). இப்படி மறையவில்லை என்றால், ஏய் என்று ஆகி, விளிச்சொல்லுடன் மயங்கும்.
அடுத்து, கலை என்ற சொல். அம்பு எய்வது ஒரு கலை.
வன் என்பதில், வ்+அன் ஆகவே வகர உடம்படு மெய்யும் அன் என்னும் ஆண்பால் விகுதியும்.
வல் > வன் என்றும் திரிந்து, வல்லவன் என்பதையும் குறிக்கும்.
ஆக இது தமிழ் மூலங்களையுடைய ஒரு பெயர்
Ekalavya: Notes
ஏகலைவன் என்பது தமிழ் வடிவம். சங்கதத்தில் "ஏகலவ்யா". ஏகலைவன் என்று நேர்புனைவாக இல்லாமல் ஏகலைவ்+ய்+அ(ன்) என்று மாற்றம்பெற்றுள்ளது. வகர உடம்படு மெய்யும் யகர உடம்படு மெய்யும் உள்பொதியப்பட்டு, ஆண்பால் னகர ஒற்று களையப்பட்டுச் சொல்லாக்கம் பொற்றுள்ளது. ஏகலைவன் கரு நிறத்தோன் என்பதும் கவனிக்கத் தக்கது.
வட பெரு நிலப்பகுதியில் கருப்பு இனத்தோர் ஆட்சி செய்த பாகங்களும் இருந்தன என்பதும் அவர்கள் பற்பல கலைகளையும் அறிந்திருந்தனர் என்பதும் இதனால் பெறப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக