kavimaNi on workers (poem)
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை poem on workers
ஆசிய ஜோதி, உமர்கய்யாம் பாடல்கள் முதலியன அளித்து தமிழிலக்கியத்தை மேலும் வளப்படுத்திய கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின் ஓர் அழகிய பாடல். ஏழை எளிய மக்களையும் தொழிலாள உடன்பிறப்புக்களையும் உள்ளத்தில் கொண்டு அவர் பாடியது:
பாடு படுவோர்க்கே--- இந்தப்
பாரிடம் சொந்தமையா;
காடு திருத்தி நல்ல--- நாடு
காண்பது அவரல்லவோ
மனம் திரியாமல்---காலை
மாலை எப்பொழுதும்
குனிந்து வேலை--- செய்வோர்
கும்பி கொதிக்கலாமோ
கோடி கோடியாக---நீங்கள்
குவித்திடும் லாபம்
வாடும் எம்மக்கள்---உண்ணா
வயிற்றுச் சோறல்லவோ
வாழ வேண்டுமெனில்---தொழில்கள்
வளர வேண்டுமையா
ஏழை என்றொருவன்---உலகில்
இருக்க லாகாதையா ( பாடுபடுவோர்க்கே)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக