திங்கள், 5 பிப்ரவரி, 2024

மூத்திரம் சொல்.

 மூத்திரம் என்ற் சொல், தமிழ்நாட்டுப் பேச்சு வழக்குச் சொல்.

மூள் என்றால் உடலில் மூண்டு வெளிவருவது.  மூளுதல் என்றால் உண்டாவது.

மூள் >  மூ  ( இது கடைக்குறை).

திரி + அம் >  திரம்,  மாற்றமடைந்த வெளிவரும் நீர்.

திரம்,  திரை என்பவை நீர் குறிப்பவை.  திரை என்பது கடல்நீர்.

மூ + திரம் >  மூத்திரம் ஆயிற்று.

மூள்+ திரம் > மூட்டிரம் > மூத்திரம் என்று காட்டுவதும் உண்டு. 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

பாத்திரம் என்ற சொல்

 பாத்திரம் என்ற சொல்லைப் பார்ப்போம்.

பாத்திரம் என்பது  பரவலான வாய் திறந்த ஓர் ஏனம்.

பர ( பரவலான ) திற ( வாய் திறந்த )  கொள்கலம். அல்லது அடுகலன்..

பர என்பது  பார்> பா என்று திரியும்.

இது வரு > வார்> வா என்பது போலும் ஒரு திரிபு.

இதன் திரிபை வருக, வாராய், வா என்பவற்றில் உணர்க.

திற ( திறப்பு) என்பது  திர என்று திரிந்தது.  திற என்பது இன்னொரு சொல்லின் பகுதியாய் வந்தால் திர என்று இடையினமாகும். இது பல சொற்களில் வரும்.

திற+ அம் > திரம்,  வினைச்சொல் அம் விகுதி பெற்று புதிய சொல்லின் உள்ளுறைவு ஆனது.

பாத்திரம் சொல்லமைந்து விட்டது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

பலி (பலிகொடுத்தல்)

இன்று பலி என்னும் சொல்லைப் பற்றி அறிந்துகொள்வோம்.

பலி என்னும் சொல்  முன் பரி என்று இருந்து பின்  திரிபு அடைந்து பலி என்றானது என்பது அறியவேண்டும்.   இது இப்போது bali என்று எடுத்தொலி செய்யப்பட்டு அயற்சொல் போல பலுக்கப்படுவதால் அயற்சொல் போல் தோன்றுவதாகிறது.  

இது தலைவெட்டப்பட்டுக் கொல்லப்படுவதைக் குறிக்கிறது.  பரித்தல் எனின் வெட்டப்படுதல்  தொடர்புடைய இடுகை:

ஆடு கோழி முதலியவாய் பலவாகக் காவல்தெய்வத்துக்கு வெட்டப்படுதலாலும் பல் என்னும் அடியிலிருந்தும் இச்சொல் விளக்கப்படலாம். ஆதலின் இது இருபிறப்பி ஆகும்.

 https://sivamaalaa.blogspot.com/2016/08/blog-post_29.html

அறிக மகிழ்க