இதனை இப்போது அறிவோம். ப
ஒரு சொல்லுக்கு ஒரு பொருள்தான் என்பதில்லை. சொற்களுக்குப் பலவாறு பகுத்துப் பொருள்கூறவும் தமிழில் வசதி உள்ளது.
சீரிய மாலை என்ற தமிழ்த் தொடர் எவ்வாறு மாறி அமைகிறது என்று காண்போம்.
சீரிய மாலை > சீய மாலா > சியாமலா > சியாமளா என்று ஆகிவிடும்.
சீரிய என்ற சொல் தன் ரிகரத்தை இழந்து சீய என்று இடைக்குறையாகும்.
இது பின் சியா என்றாவது அயல்மொழியில் ஏற்படும் மாற்றம். நெடில் குறில் என்று வராமல் குறில் நெடிலாக மாறியமையும். இது அயல்மொழித் திரிபு.
மாலை என்பதும் மாலா என்றாகும். ஆகரத்தில் முடிதல் தமிழிலும் உண்டு. இது பெரும்பாலும் நெடில் குறிலாக இல்லாமல் குறில் நெடிலாக மாறுதல் அடையும்.
மலா> மளா என்று மாறும்.
சீரிய மாலை என்பது முற்றும் இருளான மாலை நேரத்தைக் குறிக்கும். இது மாலை என்னும் பூத்தொடுப்பைக் குறிப்பதாகத் தெரியவில்லை.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை உடைய இடுகை.