"அவலாகு ஒன்றோ மிகையாகு ஒன்றோ" என்பது ஔவையாரின் பாடல் வரிகள். புறம் 187
(இப்பாடலையும் அதன் பொருள் விளக்கத்தையும் இந்த முன் இடுகையில் காண்க: Pl see April 2012 collections. for this poem by Avvaiyar, -> below )
அவல் என்பது மலைப்பாங்கான இடத்துக்கு எதிரான பொருளில் இப்பாடலில் வருகிறது. மலை என்ற சொல்லுக்கு மடுவு என்பதுபோலவும், மேடு என்பதற்குப் பள்ளம் என்பது போலவும் எதிராக உள்ளது.
அரிசியிலிருந்து செய்யப்படும் அவல் என்பது வேறு.
அழு > ஆழ் > ஆழம்.
அழு > ஆழ் > ஆழ்தல்.
அழு > அழுந்து.
அழு > அழுந்து > அழுந்துதல்.
அழு > அழுவம்.
azuvam 1. depth; 2. pit; 3. deep sea; 4. expanse; 5. jungle, forest; 6. country, district; 7. battle; 8. middle; 9. abundance, copiousness; 10. greatness, excellence; 11. fortress
அழு > ( அழுவல் ) > அவல்.
எனவே, "ழு" இடைக்குறைந்து, அவலாயிற்று
இதில், அழுவம் என்பதனோடு ஒப்பிட்டு, அழுவல் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இனி, அழு > அழுவு > அவு > அவல் என்றும் இதனை உணர்ந்துகொள்ளலாம்.