புராணம் என்பதென்ன என்று வினவிக்கொள்கிறோம். இதற்கு நாம் கண்டுபிடிக்கும் விடையிலிருந்து புராணம் என்ற சொல்லுக்கு அந்தச் சொல் புனைந்த காலத்தில் என்ன பொருளில் வழங்கியது என்று அறிந்துகொள்வோம்.
ஓர் இறைக்கதையை எடுத்துச் சொல்கிறவன், உரிய நிகழ்வினைக் கேட்டறிந்து கூறுகிறவனாகில், தான் அறியாமற் கழிந்தவை போக எஞ்சியவற்றைக் காதில் வாங்கிக்கொண்டு, அந்தக் கதையைப் புனைந்து உரைப்பவனாகிறான்.
புனைதல் என்பதென்ன? புனையரணம் புராணம்.இந்தச் சொல், னை என்னுமெழுத்தும் யகரமும் கெட்ட ( அல்லது நீக்கப்பட்ட) சொல்லாகும். இந்தச் சொல்லும் புனைவுச்சொல்லே. அல்லது தானே மக்களிடம் திரிந்த சொல்லெனினும் அதுவும் கூடுவதே. பு(னைய)ரணம்>> புரணம்> புராணம் ஆனது. இது இரண்டு எழுத்துக்கள் மறைந்த இடைக்குறைச் சொல். எழுத்துக்கள் வேண்டுமென்றே விடுக்கப்பட்டிருந்தால் அதனைத் தொகை என்பர். மூவுழக்காழாக்குத் தினைதந்தாள் என்றதை மூழாக்காழாக்கு என்று திரித்தால், அது தொகை ஆகும். இவ்வாறு சொல்லின் முழுமையும் அறிந்தோர் தமிழரே. பிறர் சொற்பர் ஆவர்.
இனி இன்னொரு பிறப்பும் இச்சொல்லுக்குக் கூறலாம். இலக்கியத்தை, கவிதையை, இறைவரலாற்றை, நடந்தனவற்றை உள்ளபடி காத்து வைப்பதற்கு ஆனவற்றை எழுதிவைக்க , புர+ அணம் > புராணம் என்று சொல்லமைந்தது என்னில், அதுவும் கூடுவதே.
இச்சொல்லை முன்னரே ஆய்ந்தோ ஆயாமலோ, அமைப்புக் கூறினவர்களும் உள்ளனர். அவர்கள் பழையன காத்தல் என்ற பொருளில் புராணம் ஆகும் என்றனர். அதையும் சிந்தித்துக்கொண்டால், இச்சொல் ஒரு பலபிறப்பி என்று கொள்ளவேண்டும். பிற கூறினோரும் உளர். அவற்றை அவர்தம் நூலிற் காண்க.
புராணம் என்றால் பழமையானது, பொய்யுரை என்ற பொருளில் இங்கு எதுவும் கூறப்படவில்லை என்பதறிக.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை