இந்த மரியாதைப் பண்புக்கு உண்டான பெயரை இன்று அறிகிறோம்.
அணுக்கமாக வந்து பழகுவோரை உரிய பணிவன்புடன் நாம் போற்றிக்கொள்ளவேண்டும். எந்த நேரத்தில் எவனால் அல்லது எவளால் நமக்கு ஒரு காரியம் ஆகவேண்டிய சூழ்நிலை வருமென்பதை உலகில் கணித்து வைத்துக்கொண்டு நடந்துவிடுதல் என்பது இயலாத வேலை. சிறுதுரும்பும் ஒரு பல்குத்த உதவும் என்பது உண்மையான ஒரு பழமொழி.
அணுகி அகமும் புறமும் மகிழ நிற்பவரை ''அணுகும் அகத்தினர்'' என்ற தொடரால் அறிந்து கொண்டது பண்டைத் தமிழரின் பேராண்மையைத் தெளியக் காட்டுகிறது
அணுகு + அகத்து + இ > அணுககத்தி > (அண்கு + அகத்து + இ > அண்+ ககத்தி + அங்ககத்தி என்ற சொல் அமைந்தது மகிழத்தக்கது.
ணகர ஒற்று ங்கென்று வந்தது அறிந்துகொள்க. இதுபோலும் சொற்களை முன் பழைய இடுகைகளில் காட்டியுள்ளோம்.
உறுப்புகள் அணுக்கமாக உள்ள பைக்குள் இருப்பதே அங்கம் என்பதும் ஆகும். அணுகு+ அம் > அங்கு+ அம் > அங்கம் ஆகும். தமிழ்ச்சொல். அணுகில் உகரம் ஒழிய, அண் கு அம் > அண்கம் > அங்கம் ஆகும். இது வருமொழி நிலைமொழிப் புணர்ச்சி அன்று. சொல்லாக்கப் புணர்ச்சி இலக்கண நூல்களில் சொல்லப்படவில்லை.
நீங்கள் (நிங்கள் > நிங்ஙள்) என்னாமல் தாங்கள் தங்கள் என்பன இப்பணிவண்பு.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை உடையது