இச்சொல்லை அறிந்துகொள்வோம்.
ஸ்தாபித்தல் என்ற சொல்லை தற்காலத்தில் அவ்வளவாக நாம் உரைநடையில் எதிர்கொள்வதில்லை.. அதற்குப் பதிலாகவோ அன்றித் தனித்தமிழிலோ நிறுவுதல் என்ற சொல் நன்கு வழங்குகிறது. வேறு வகைகளில் சொல்வதற்குப் பல வழிகள் உரைநடையில் உள்ளன.
தாபித்தல் அல்லது தாவித்தல் என்று வருவதில்லை.
ஸ்தாபித்தல் என்றால் தளம் அமைத்து எழுப்புதல் என்று சொல்ல, அது சரியாகவிருக்கும்.
தளம் > தளப்பித்தல் > தாள்பித்தல் > தாட்பித்தல் > தாபித்தல் > ஸ்தாபித்தல் என்று வந்ததே இச்சொல்.
ஓர் அமைப்பின் தாள் அல்லது அடிப்பகுதியாய் இருப்பதே தளமாகும்..
தாள் > தாள்+ அம் > தளம்.
இதில் அம் விகுதி வந்து சேர, தாள் என்பது தளம் என்று குறுகி அமைந்தது.
சாவு+ அம் > சவம் என்றமைந்தது போலுமே இது. இதுவே போல் தோண்டப்பட்டது போன்றிருக்கும் குழாய், தொண்டை என்று குறுகி அமைந்ததும் காண்பீராக.
வாண்டையார் என்ற பட்டப்பெயர் வள் என்ற அடியிற் றோன்றி, -----
வள் > வாள்> வாண்டை > வாண்டையார் ( வளமுடையார்) என்ற பொருளில் வரும் என்பதும் அறிக.
நீள்தலும் சுருங்குதலும் தமிழியல்பு, சொற்களில். வருக, வாங்க என்ற சொற்களில் வரும் சுருக்கம் நீட்சிகளை அறிக.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.
பகிர்வுரிமை.