இன்று வெடி வேட்டு என்னும் சொற்களைக் கருதுவோம்.
வெடி வேட்டு என்பன இடையின வகரத்தில் தொடங்கிய சொற்களாயினும் வல்லின டகரம் வருதலால், வெடிப்பு நிகழ்வுக்குப் பொருத்தமான சொற்களாய்விடுகின்றன. இடிபோலும் இயற்கை நிகழ்வுகளி லிருந்து மனிதன் வெடியொலியையும் அதன் தாக்ககத்தினையும் நன்கு அறிந்துகொள்வா னாயினன். வெடுக்கெனல் என்பது வேகத்தையும் ''டுக்''கென்ற ஒலியையும் ஒருங்கே குறிக்கவல்லதாய் இருக்கிறது.
வெடி என்பதில் ஒலிமுறையில் நாம் காதில் அதிர்வையும் காட்சிக்கு விரைவையும் கண்டுபிடித்தாலும் சேர்த்துவைத்த வெடிபொருள் ஓரிடத்திலிருந்து சட்டென்று பிளந்துகொண்டு வெளிப்படுவதையே முதன்மையாக அறிகிறோம். இவ்வாறு விடுதலுக்கு விள்> விடு>வெடு> வெடிப்பு; விள்> வெள்> வெடி> வெடிப்பு; விள்> வெள்> வெடு> வேடு> வேட்டு என்றபடி சொற்கள் திரிவன வென்பதை அறியலாம்.
வெடிக்குமிடத்தில் உள்ள நிலம் அல்லது பிற இடம் சேர்ந்து இருத்தலை விட்டு, அங்கு விடுபாடு அல்லது பிளவு ஏற்படுவதையும் அறியலாம்.
வெடிக்கும் இடத்தில் ஒரு வெட்டு விழுந்திருந்தால், வெட்டு> வேட்டு என்று முதனிலைத் திரிபு இருப்பதை உணரலாம்.
இவற்றை உணர்ந்து தமிழ்ச் சொல்லமைப்பை உணர்ந்து மகிழ்க.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை வழங்கப்படுகிறது.