விக்கிரமி என்ற சொல்லுக்குச் சிங்கம் என்ற பொருளுடன் வீரம் என்ற பொருளும் கிடைக்கிறது. என்ற போதிலும் ஒப்பீட்டுச் சொல்லியல் என்று வருகையில், அதனை வில் என்ற பழைய போர்க்கருவியின் அடிப்படையில் அமைந்த சொற்களுடனும் பொருண்மையுடனும்தான் நிறுத்திப் பார்க்கவேண்டும். விக்கிரமி என்ற சொல் ஒரு கருவிப்பெயரின் அமைப்பிலிருந்து எழுந்த சொல்லாகும் என்று உணர்க. இது எவ்வாறு என்று பார்ப்போம்.
வில் + கு+ இரு + அம் + இ என்று இதைப் பிரிக்கவேண்டும். இவ்வாறு செய்கையில் வில்லுக்கு இருக்கின்ற அமைப்பில் இணைந்திருப்பது என்ற பொருள் கிடைக்கிறது. இந்த வில்லின் அமைப்பில் இணைந்திருப்பது எது என்று ஆராய்ந்தால் அதுதான் வீரம் என்று பொருண்மை கிட்டுகின்றது. ஆகவே விக்கிரமி என்பதற்கு வீரம் என்ற அகரவரிசைப் பொருள் கிட்டிவிடுகின்றது.
பண்டைக் காலத்தில் வில்லும் ஒரு சிறந்த போர்க்கருவியாய் இருந்தது. வில்லாளன் என்ற சொல்லும் இக்கருவிகளைப் பயன்படுத்திய வீரர்களின் மறப்பண்பினைப் போற்றி எழுந்த சொல்தான். இதையே விக்கிரமி என்ற சொல்லும் எடுத்தியம்புகின்றது.
சொற்புணர்ச்சித் திரிபின் காரணமாக விக்கிரமி என்ற சொல் அவ்வளவு தெளிவாகத் தன்னை அடையாளம் காட்டிக்கொள்வதில்லை.
வில்லுக்கும் விக்கிரமிக்கும் உள்ள தொடர்பினைக் கண்டீர்கள்.
இதில் விற்கு என்பது விக்கு(இரு) என்று வந்தது முறையாக வந்த திரிபுதான். விற்கு என்பது விக்கு என்று வருவது பேச்சுவழக்குத் திரிபுபோல் தோன்றலாம். நல்+கீரன் என்பது நக்கீரன் என்று வர, இந்தவகைத் திரிபுகள் இல்லை என்று கூறிவிட முடியாது. நல் என்பது ந என்று கடைக்குறையானது என்றால் அதுவேபோல் வில் என்பது வி என்று கடைக்குறையாகலாம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை வழங்கப்படுகிறது.