செவ்வாய், 1 ஜூலை, 2025

வருத்தகம் அல்லது வர்த்தகம்,

 ஒரு நாட்டுக்கு வேண்டிய பொருள்களை வருவித்துக் கொள்ளுதல் அதாவது அப்பொருள்களை விளைவிக்கும் நாடுகளிலிருந்து வரவழைத்துப் பெற்றுக்கொள்ளுதல்  என்பது  வருத்தகம் எனப்பட்டு, நாளடைவில் இச்சொல் வர்த்தகம் என்று சற்றுச் சுருங்கிற்று.  இது அமைப்புப் பொருளில் இறக்குமதிப் பொருள்களையே  குறித்தது.

காலக்கடப்பில் இது ஏற்றுமதியையும் குறித்து விற்றல் வாங்குதல் ஆகிய  பொது வணிகத்தையும் குறித்தது.

மொழியில் சொல் உண்டாகும்போது இருக்கும் பொருளே தொடர்ந்து இருப்பதில்லை.  இச்சொல்லில் ஏற்பட்டதுபோல் பொருள்  மாறுபாடுகள் விளைந்து வேறு பொருண்மை பெறுவதும் உண்டு.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை வழங்கப்படுகிறது

சனி, 28 ஜூன், 2025

சியாமளா என்ற பெயரமைப்பு

 இதனை இப்போது அறிவோம். ப

ஒரு சொல்லுக்கு ஒரு பொருள்தான் என்பதில்லை.  சொற்களுக்குப் பலவாறு பகுத்துப் பொருள்கூறவும் தமிழில் வசதி உள்ளது.

சீரிய மாலை என்ற தமிழ்த் தொடர் எவ்வாறு மாறி அமைகிறது என்று காண்போம்.

சீரிய மாலை >  சீய மாலா >  சியாமலா >  சியாமளா என்று ஆகிவிடும்.

சீரிய என்ற சொல் தன் ரிகரத்தை இழந்து சீய என்று இடைக்குறையாகும்.

இது பின் சியா என்றாவது அயல்மொழியில் ஏற்படும் மாற்றம்.  நெடில் குறில் என்று வராமல் குறில் நெடிலாக மாறியமையும்.  இது அயல்மொழித் திரிபு.

மாலை என்பதும் மாலா என்றாகும்.  ஆகரத்தில் முடிதல் தமிழிலும் உண்டு.  இது பெரும்பாலும் நெடில் குறிலாக இல்லாமல் குறில் நெடிலாக மாறுதல் அடையும்.

மலா>  மளா என்று மாறும்.

சீரிய மாலை என்பது முற்றும் இருளான மாலை நேரத்தைக் குறிக்கும். இது மாலை என்னும் பூத்தொடுப்பைக் குறிப்பதாகத் தெரியவில்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடைய இடுகை.




சமஸ்கிருதம் சென்ற தமிழ்த்தொடர்.

'' நமைக்காக்க!'' என்பது பலர் இணைந்து வேண்டும் ஒரு குழுவினரின் குரலாக ஒலிக்கின்ற வரை  அது ''நமைக்காக்க வேண்டும் இறைவனே'' என்ற வேண்டுதலை முன்வைக்கும் ஒரு சொல்லாக இருந்தது. அது மந்திர மொழியாகி அதே வேண்டுதலையே முன்வைத்தால், அது மாற்றமின்றித் தொடர்ந்திருக்கலாம்.  அல்லது காலப்போக்கில் திரிபு அடைந்திருக்கவும் கூடும்.  இவ்விரண்டனுள் எது நடந்திருக்கும் என்பதை  நமஹா என்ற சமஸ்கிருதச் சொல்லே காட்டுகின்றது..  நமைக்காக்க என்ற தமிழ்த் தொடர்,  நமஹா என்ற ஒரு சொல்லாக மாறியமைந்துவிட்டது.

இப்படி மாற்றம் அடைந்ததனால் மொழிக்கு ஒரு சொல்லால் ஒரு சிறு வளர்ச்சி ஏற்பட்டது.  நமஹா என்ற புதிய சொல் சமஸ்கிருத மொழிக்குக் கிட்டியது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். 

மொழிகளில் ஒன்றன் அணைப்பினால் இன்னொன்று வளர்தல் என்பது எல்லா மொழிகளிலும் காணப்ப்படுகின்ற ஒரு தன்மையே ஆகும்.  இப்படித் தமிழின் ஒரு தொடர் சற்று மாற்றமடைந்து சமஸ்கிருதத்தைச் சற்று வளப்படுத்தியது வரவேற்கத் தக்கதொன்றே  ஆகுமென்று உணர்க. இரண்டும் இந்திய மொழிகளே  ஆகும் என்பதும்  அறியற்பாலது ஆகும்.

ஏறத் தாழ  எழுநூறு  எண்ணூறு தமிழ்ச் சொற்கள் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன என்று கமில் சுவலபெல் சொன்னார்.  இன்னும் அதிகம் கண்டுபிடித்தனர் வேறு ஆய்வறிஞர்கள். நாமும் சிலவற்றைக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறோம். இதனால் மொழிபற்றிய அறிவு முன்னேறுகிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.  தமிழ் இந்திய மொழிகளில் ஒன்று என்றும்  சமஸ்கிருதம் வெளிநாட்டு மொழி என்றும் முன்னர் செய்த வெள்ளையரின் ஆய்வு சொன்னதனால்  மேலும் பல தமிழ்ச்சொற்களைச் சமஸ்கிருத்த்தில் கண்டுபிடிப்பதற்கு ஒரு மனத்தடை இருந்துவந்தது.  இதற்குச் சரியான காரணிகள் இல்லை. வெள்ளையர்தம் கற்பனை ஆய்வினால் ஏற்பட்ட  நிலையே இதுவாகும்.

இந்திய மொழிகள் இவை என்பது இப்போது புலப்படுதலால் ஒப்பீடு செய்வதற்கான தடை இப்போது இல்லை என்பது உணர்க.

நம- ஹா  என்பது நமைக்  கா என்பதன் திரிபே என்பதை  அறிய, பொய்மை தானே விலகிவிடும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை உடைய இடுகை