சனி, 7 ஜூன், 2025

இந்து நாடு - எழும் பொருள்

 இந்து என்பதைப் பற்றி பலதரப்பட்ட பொருண்மைகள்  வலம் வந்துகொண்டுள்ளன. அவற்றுட் பல வியப்பை விளைவிப்பன; சில கேட்பார் உள்ளத்தில் இசைவையும் இணைப்பையும் உறுத்துவன.

இந்து  என்றால் நிலா என்ற பொருளும் உள்ளது. " இந்தின் இளம்பிறை போலும் ஏய்ிற்றனை" என்று பாடல் வருகிறதே.

இந்து வாழ்வியல் முறை இலங்கும் நாடு இந்து நாடு எனப்படுதல்

ஓர் இயல்பும் ஆகும்.

https://youtube.com/shorts/4mQw8LR9uuk?si=f5DhPhXypb7dGOj

மேற்கண்ட இணைப்பைச் சொடுக்கி அதனிற் பொதிந்துள்ள கருத்தினையும் அறிக.

வியாழன், 5 ஜூன், 2025

அணிந்தனம் என்பதன் திரிபு அஞ்சனம் என்றானது

 அணிந்தனம் என்ற நல்ல தமிழ்ச்சொல். பேச்சுவழக்கில், அணிஞ்சனம் என்று வரும். அதாவது  அணிந்துகொண்டேன் என்பது தமிழ்ச்சொல்லின் பொருள். என்ன அணிந்துகொண்டீர் என்றால்  மிக்க முதன்மை வாய்ந்த மையை என்று சொல்லவேண்டியது தெளிவாகும்.

இனி, அணிஞ்சனம் என்பது  ஓரெழுத்துக் குறைத்தால்,  அஞ்சனம்  ஆகிறது.  இது மையழகு ஒப்பனை என்று சொல்லவேண்டாத நிலையில்  மையழகுக்குப் பெயராய் வந்துவிட்டது.

இப்படிச் சொல்லமைப்பதும் ஒரு தந்திரம்தான் என்பதில் ஐயமில்லை.

அறிக் மகிழ்க

மெய்ப்பு பின்.

பகிர்வுரிமை வழங்கப்படுகிறது/

செவ்வாய், 3 ஜூன், 2025

காலும் காலமும்

 கால் என்பது ”நீண்டு செல்லுவது," என்று பொருள் படும் சொல்.  பந்தல் கால் என்ற வழக்கை நோக்குக. இனிக் கால் என்ற சொல்லும் பொழுது அல்லது போது என்பவற்றுக்கு ஈடாகவும் வழங்கும். " இல்லாக்கால்" என்பது இல்லாதபோது என்று பொருள் தருதல் காண்க.

கால் என்பது நேரம் என ற சொல் குறிப்பதை விடக் குறுகிய பொழுது ஆகும்.

கால் என்பது அம் விகுதி பெற்றுக் காலம் என்ற சொல் அமையும். இதன் அடிச்சொல் கால் தமிழ்ச் சொல் ஆதலால் காலம் என்பதும் தமிழ்ச்சொல்லே  ஆகும். சங்கதம் என்னும் சமஸ்கிருதத்திலும் இ ச் சொல் வழங்கும்.  ஆதலால்  இதைப் பொதுச் சொல் என்றும் சொல்வர்.  சங்கத மொழியும்  உள்நாட்டு மொழியே.  காலம் என்பது நீண்ட கால அளவைக் குறிக்கும்.  எ-டு::இளவேனிற் காலம் ,  (வசந்த காலம் ).  

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

இதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்க.