சனி, 1 பிப்ரவரி, 2025

தேசத்துரோகம் சொல்

 தேசத்துரோகம் என்னும் சொல் எவ்வாறு அமைந்தது என்று பார்ப்போம்.

இஃது இணைப்புற்ற சொல் என்பது யாவரும் எளிதில் அறிவதே ஆகும்.

தேசம் என்ற சொல் இப்போது இந்தியாவிலும் பிற இடங்களிலும் அறியப்பட்ட சொல்லாயினும் இது முன்னர் தேயம் என்று இருந்தது.  அதற்கும் முன்பு அது தேம், தேஎம் என்று அளபெழுந்தும் அளபெழாமலும் வழங்கியது.இதன் அடிச்சொல் தேய் அல்லது சிற்றூர் வழக்கில் தே என்பதே ஆகும். இதற்குரிய வினைச்சொல் தேய்தல் என்பதுதான்.  ஏன் இந்த அடியிலிருந்து இது வழங்கவேண்டு  மெனில்,  எந்த நாடும் நாளடைவில் தேய்ந்துவிடக் கூடியது என்பதனால்தான். அரச னொருவனுக்கு பிள்ளைகள் இருந்தால் அந்தப் பிள்ளைகள் அரசன் இறந்தபின் நாட்டைப் பங்குவைத்துக் கொள்ளுதல் உள்ளது. ஐந்து பிள்ளைகள் ஐந்து பங்காகக் கொண்டனர் எனின் நாடு உடைந்து சிறு துண்டுகளாகிவிடும். இவ்வாறு நடவாவிட்டால் எதிரி நாட்டினர் வந்து தாக்கி நாட்டின் பகுதிகளைத்  தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொள்வர். அப்போதும் நாடு துண்டுகளாகித் தேய்வுறும். இயற்கைப் பேரிடர்களாலும் நாட்டின் பகுதி அழிவுறுவதுண்டு. உள்நாட்டுக் கலகங்களையும் தேய்வுக்குக் காரணமாகக் கொள்ளலாம்.  கலகத்தால் ஒரு பகுதி விடுபட்டு தனியாட்சி அமைதல்.

தே அல்லது தேய் என்ற இரண்டையும் தொடர்புடைய வினைகளாகக் கொள்க.

துரோகம் என்ற சொல்லின் துருவுதல், ஓங்குதல் என்ற இரண்டு வினைகள் தொடர்புபட்டுள்ளன. துரோகம் செய்பவன் எப்படி ஒரு தீவினை செய்வது என்று துருவி ஆராய்ந்து செய்வான்.  இதை துரு என்ற சொல் தருகிறது.  அடுத்து ஓங்குதல் என்ற சொல் ஓங்கு> ஓகு> ஓகு அம் > ஓகம் என்று பெயரைப் பிறப்பிக்கிறது.

இரு முழுச்சொற்களையும் இணைத்து,  தேசத்துரோகம் என்றாகிறது. துரோகம் என்ற சொல் சிற்றூரில் வழக்குடையதுதான்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்


வியாழன், 30 ஜனவரி, 2025

வரி என்னும் சொல்.

  •  வரி என்னும் சொல் தொன்றுதொட்டுத் தமிழில் வழக்குச் சொல்லாக உள்ளது.  வழக்குச்சொல் என்பது புழக்கத்தில் உள்ள சொல்.
  • வரவு, வருமானம் என்ற சொற்களும் உள்ளன. இவை பொதுப்பொருளில் வழங்குவன. வரி என்பது வரு+ இ > வரி என்றாகும்.  வரு என்பதில் இறுதியில் உள்ள உ கெட்டு ( கெட்டு என்றால் நீங்கி)  வர் என்றாகும், பின் இகர விகுதி பெற்று வரியாகும்,  இவ்வாறு உகரம் கெட்ட சொல் இன்னொன்று அறம் என்பது. அறு + அம் > அறம்.  அறு என்பதிலுள்ள உகரமும் கெட்டு.  அற் என்று நிற்க உகரம் சென்று ற் உடன் இணைந்து ற்+ அம் > றம் என்று வந்து அறம் என்ற சொல் ஏற்பட்டது.  இவை இவை செய்யவேண்டியவை, இவை இவை விலக்க வேண்டியவை என்று அறுத்துச் சொன்னதால் அறம் ஆயிற்று என்று உணரவேண்டும். வரவு என்ற சொல்லில் வரு என்பதில் உள்ள உகரம் இவ்வாறே கெட்டது. வர் என்ற மிச்சத்தோடு  அகரம் இடைநிலையாகி நின்று இறுதியில் வு விகுதி பெற்று  வரு+ அ + வு >   வரவு ஆயிற்று
  • யானைக்கு வாரணம் என்ற பெயருண்டு.  இது வரு + அணம் > வாரணம். இது முதனிலை நீண்டு அண் அம் என்று இடைநிலை கலந்த விகுதி பெற்று இச்சொல் அமைந்தது.  இதன் அணம் விகுதி என்று சொல்வதுண்டு.  கட்டவேண்டிய காசு கட்டணம் எனப்பட்டது போல.  ஊர்வலத்தில் வரும் யானையை வாரணம் என்று குறித்தனர். பின்னர் இது விரிந்தது. அவ்வாறு வராமல் நிலையாக ஓரிடத்தில் கட்டிக்கிடக்கும் யானையும் குறிக்கப் பொருள் விரிவதில் வெற்றுவிரிவுதான் காணப்படும். வாரணம் பிற பன்றி முதலியனவும் குறிக்க விரிந்தது.  இது பயன்பாட்டு விரிவு என்க.
  • இதன்மூலம் வரி என்பதில் இகரம் கெட்டு விகுதி பெறுதல் பிறசொற்கள் ஒப்பீட்டுடன் விளக்கப்பெற்றது.
  • அறிக மகிழ்க
  • மெய்ப்பு பின்


தோத்திரம் என்னும் வணக்கச்சொல்.

 தோத்திரம் என்னும் சொல்லை ஆய்வு செய்வோம்,

பத்தியில் தோய்ந்தபடி சொல்லும் வணக்கமே தோத்திரம் ஆகும்

தோய்> தோய்த்திரம் > (  ய் மெய்யெழுத்துக் குன்றி )  > தோத்திரம். 

இதுபோல் யகர ஒற்றுக் குறைந்த இன்னொரு சொல் வாய்த்தியார் > வாத்தியார் என்பது,

இன்னொரு சொல்.  உய் > உய்த்தல் > உய்த்தி > உத்தி என்ற சொல்லையும் எடுத்துக்க்காட்டலாம்.

இன்னும் பல உதாகரணங்கள் பழைய இடுகைகளில் காணலாம்.

தொழுதல் வினையில்,  தொழுத்திறம் என்பது தோய்த்திரம் > தோத்திரம் ஆனதாகவும் கூறலாம்.

இச்சொல் பல்பிறப்பி ஆகும். இதுவும் தமிழ்ச்சொல்லே.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்