வெள்ளி, 10 ஜனவரி, 2025

குறு என்னும் அடிச்சொல்லும் சிலுவையும்

 குரோதித்தல் என்ற வினைக்கு  வேறு பொருள் கூறப்பட்டாலும் அப்பொருள் வந்த விதத்தை யாம் முன்னர் எழுதியுள்ளோம்,  இப்போது குறு  ( குறுமை) என்ற சொல்லுடன் தொடர்புபடுத்தி அந்தப் பொருள் வராவிட்டாலும் பொருந்தும் ஒரு பொருள் வருகிறதா என்று ஆய்வு செய்வோம்,

குறு -  இது குறுமை, குறுக்கம், குறுக்கு முதலியவற்றின் அடிச்சொல்.  குறுதொழில்கள் என்பதில் அடையாக வரும் சொல்.

குறுக்கை என்றொரு சொல் தேவநேயனாரால் படைக்கப்பட்டது.  அது சிலுவை என்ற சொல்லுக்கு ஈடாக அவரால் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது. 

சிலுவை என்ற சொல் குறுக்குச் சட்டத்தில் தொங்கும் தண்டனையைக் குறிக்கமால்  சில் =  சிறிய,  உ= முன்,  வை = வைத்தல்,  ஆகவே சிறிய ஒரு மரத்தில் முன் வைத்தல் என்று பொருள்படுகிறது. மரத்தில் என்ற சொல் முன் வைத்தே  (கூட்டியே)  பொருள்கூறவேண்டும்.

சிலு என்பது பதனழிதல் என்பததைக் காட்டும் சொல்.  பெரும்பாணாற்றுப் படையின் உரையிலிருந்து இப்பொருளைக் காட்டுகிறார்கள்.  ஆனால் சில் முன் கூறியபடி சிறுமை குறுக்கும் அடிச்சொல். 

Nothing be fruits

 To think of nothing

If it gives the peace

Reckon that as something

Like fruits in the garden trees

புதன், 8 ஜனவரி, 2025

மேதாவிலாசம் என்ற பதம்

 மேதாவி என்பது முதலாவதாக அஃறிணைகளுள் பல்திறங் கொண்டவற்றை குறித்த சொல்லா அல்லது மனிதருள் கல்விமேன்மை உடையோரைக் குறித்ததா என்பதை இப்போது கூறுதல் எளிதன்று.   இச்சொல் கிளியையும் குறிக்கிறது.  கிளிகள் அவற்றை வளர்ப்போரை அசத்தும் அளவிற்கு அறிவுத்திறம் காட்டியதாலே இச்சொல் அவற்றையும் குறித்ததென்று கூறற்கு உரிய அடிப்படை உள்ளது. பேசும் கிளிகளைக் கண்டு இதனை அறியலாம். கடினமான சீனமொழியையும் அவை நன்றாகப் பேசுகின்றன. எம் வீட்டின் பலகணி வழியாக சாலையின் மறு புறத்தில் உள்ள ஒரு கிளி யாம் உணவு கொள்வதை அறிந்து பலமான ஒலி எழுப்பி ஐயா ஐயா என்று அழைப்பது உண்மையில் வியப்பை வரவழைக்கிறது.

மேலே தாவுதல் என்பது,  நாம் ஒன்றைக் கண்டுகொள்ளுமுன்,  கிளி அதை எதிர்பார்த்துக் கண்டு சொல்லிவிடுகிறது என்பதைக் குறிக்கும்  மனிதன் இப்படி அறிந்துகொள்ளும் திறம் உடையவன்.  அதனால் அவ்வாறு திறனுள்ள மனிதனையும் அது குறிக்கும்.

மேல் தாவுதல் >  மே தாவு இ >  மேதாவி என்பது பொருந்துகிறது.

விபுதர் என்பது விழுமிய புலத்தினால் தருபவர் என்பது. ( குறுக்கச்சொல்). தற்கால வெளியீடுகளில் வராத சொல் இது.  புலம் என்பது கண் செவி முதலான பொறிகளால் பெற்றறிதல்.

மேலானவற்றையே தருகின்ற விற்பன்னரையும் அது குறிக்கும்.  இயல்பான பொருண்மைகளைத் தவிர்த்து எப்போதும் உயர்கருத்தையே முன் வைக்கும் பழக்கம் உடையர் என்ற பொருளில்,  மே -  மேலானவற்றை, தா -  தருகின்ற, வி- விற்பன்னர் என்ற பொருளும் இதிற் பொருந்துகிறத்.  விற்பன்னர், விரிப்பவர், விள்ளுவார் என்பவை மூன்றும் இயைவன ஆகும்.

வில் :  வில்போலும் குறிபார்த்துச் சொல் விட்டு,

பன்னர் -  பன்னுபவர், பலகாலும் வலியுறுத்துபவர்.

பன்னுதல் என்பது: பல் - பன்: பலமுறை சொல்வது.

பல்லிலும் பட்டு வெளிவருவதே சொல். பல் இல்லையானால் பேச்சு,   பிறழ்ச்சி அடையும்.  பல்> பன் என்பது லகர னகரத் திரிபு.  பிறமொழிகளும் இத்தகைய திரிபுகளை உடையன.  பழைய இடுகைகளில் இவை உள்ளபடியால் இங்கு  கூறப்படவில்லை.  கூறின் பன்முறை சொல்லி  அலுப்பை எழுப்புவதாக அன்பர்கள் எழுதிக் கடிவதால்,  கூறியவை கூறல் விடுத்துவிட்டோம்.

மேயவை தருதல்,  விடுபவர் என்றும் பொருள்.  மேயவை தாரா விடுபாடு என்பதும் மே- தா - வி  என்றாகும்.. இது பழிப்புரை பாற்படும்.

மேவுதல் மென்மேல் உரைத்தலுமாகும்.

வில ஆயது  அம்:  விலக்கவேண்டியன விலக்கி, ஆவன இணைத்து,  அமைத்தல். வில ஆய அம் >  வில ஆச அம்>  விலாசம்.   யகரம் சகரமாகும், இது திரிபு நெறி. இவற்றை அறியாதார் பலருள்ளனர்.

விள் ஆசு -  சொல்லப் பற்றுவன என்று பொருள்.  விளாசு. விளாசுதல்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.