தமிழறிஞர்கள் பலரும் பலவாறு சிந்தனை செய்து ஆங்காங்குப் பொருள் கூறியிருப்பார்கள். அவை இப்போது தேடும் சமயத்தில் கிடைப்பதில்லை இல்லாவிட்டால் கைவிடப்பட்டிருக்கலாம். ஆனவற்றையே சேர்த்து வைக்காத நம் தமிழன் இவைபோன்ற பக்கச்சார்பில் உள்ளவற்றை எங்கே சேர்த்து வைக்கப்போகிறான்? தேடிப் பாருங்கள். கிட்டினால் பட்டைப்போல் பாதுகாத்துக் கொள்வோம். எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் கூட கட்டுப்பாட்டுடன் கன்னித் தமிழ் வளர்த்த சாமிநாதையர் போன்றோர் செய்த திருவினைகளில் ஒருவினையாகும்.
பிணைத்தல் என்பது ஒன்று சேர்த்தல் பொருளது ஆகும். ஒருவனைப் பிணையில் எடுக்கும்போது விடுதலையாகச் சென்று அவனை மீட்கும் உம்முடன் அடுதலையாக அவனையும் அனுப்பிவைத்தல் என்றே பொருள்படும். உம்மை அடுத்துநிற்பவராக அவரும் பிணைத்து அனுப்பப்படுவதை அறியலாம். அடு என்பதற்கு அண்டு, சுடு என்று பல்பொருள் உள. இவற்றுள் அடு என்பதற்கு ஈண்டு அடுத்துவரல் என்பதே பொருளாம். உம்முடைய விடுதலை வசதியுடன் அவனும் தன்னை இணைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறான். கொஞ்ச காலத்துக்குச் சட்டப்படி உம்முடைய அடுசரணையிலோ அனுசரணையிலோ இருக்கவேண்டியிருக்கும்.
அடுத்து உம்முடன் சரியாக நிற்பதால் அடுசரணை என்றோ அனுசரணை என்றோ சொல்லலாம். அடு+ சரி + அண்+ஐ, அனு + சரி + அண்+ ஐ. ஐ என்பது விகுதி. உயர்வும் குறிக்கும். அனு(கு) = அணுகு.
பிண்> பிணை. பிண்> பிணை> பிணைத்தல். இப்போது பிணையில் எடுத்தல் என்பதன் பொருள் ஓரளவு தெளிவாம்,
பிணம் என்ற சொல்லைப் பார்ப்போம்.
பிணத்துக்குரிய உயிராயிருந்த நல்ல மனிதர் இப்போது இங்கில்லை. அவர் விண்ணோருடன் சென்று சேர்ந்துவிட்டார். காற்றுடன் கலந்துவிட்டது அவர்தம் மூச்சு. முன்பிரிந்த மூச்சுகள் பல அவருடன் சேர்ந்து உலவிக்கொண்டிருக்கும். மேலும் இவருடல் எரிப்புக்குத் தயாராகிவிட்ட பிரிந்தார் பிறருடன் தொகுதியாகிவிடும்,
பிண்.> பிணை. பிண்> பிணம். பிணை> பிணைத்தல். பிணை எனினும் இணை எனினும் சரி.
பிணம் என்றால் அவர் உம்முடன் இல்லை; வேறிடம் இணைந்துவிட்டார் என்று பொருள்.
பிணம் என்பதை நாம் சரிவர உணர்ந்துகொள்ளத் தவறிவிடுகிறோம் என்றாலும் சொல்லாய்வின்படி அவர் பிறவிடம் பிணைந்தவர்.
நல்ல உயர்வான பொருள். இழிவு சுழிவு கழிவு என்று ஒன்றுமில்லை.
இனிப் பிண்டுபோதல் என்பதிலிருந்து விடுபடுதல் என்றும் விளக்கலாம். தமிழ்ச்சொற்கள் எல்லாம் பன்முகம் கொண்டவை. குறைந்தது இருவகையிலாவது பொருள்விளக்கம் பெறலாம். பிடு> பிண்டு வி.எச்சம்
பிண்டகம் - பிண்டு பிண்டு தனித்தனித் துண்டுகளாகவும் துகள்களாகவும் இருக்கும் சாம்பிராணித் தூள். பிண்டு அ கு : பிண்டு பிண்டு அங்கு சேர்ந்திருக்கும் தூள். அ - அங்கு; கு= சேர்ந்து. இது இனிய பொருள் தரும் சொல் ஆகும்.
சம் > சாம்: சேர்ந்திருப்பது, பிரி. - பிரிந்திருப்பது. அண் - தூளாய்க்கலந்திருப்பது, இ இறுதிவிகுதி சாம் பிரி அண் இ > சாம்பிராணி. வேறு வழிகளிலும் விளக்கலாம். சாம் - சாம்பல் என்பதோடும் தொடர்பு உள்ள சொல். அடுப்புச் சாம்பலும் சேர்ந்திருப்பதுதான், பிரிந்து காற்றுடன் பறந்தால் அது தூசு ஆகிவிடும். தனித்தனியாகத் தேடிப்பிடித்துச் சாம்பிராணி என்ற பெயருக்குப் பொருந்தாது.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்