தினகரன் என்ற சொல்லை இன்று அறிவோம்.
தினகரன் என்ற சொல்லைத் தமிழினின்று நோக்கி ஆய்வதன் மூலம் நாம் சில விளக்கங்களை அடையமுடியும். சூரியனின் அருகில் தீ எரிந்துகொண்டிருக்கிறது என்பதைப் பண்டையரும் அறிந்திருந்தனர். அவர்கள் சொல்லை இப்படிப் படைத்தனர்:
தீ + இன் + அகு + அரு + அன்.
தீயின் அங்கு அருகில் அவன் உள்ளான்.
சொல்லின் பொருட் செலவை ஒட்டியே வாக்கியம் அமைக்கப்படுகிறது.
தீ என்பது தி என்று குறுகும். தா என்ற ஏவல் வினை வினைமுற்று ஆகின் தருகிறான் என்று குறுகுதல் காண்க. இன் என்பது இகரம் அ கு என்ற இரண்டில் கு என்பது அகரத்துடன் இணைந்து ககரம் ஆகும்.
இதுபோன்ற திரிபுகட்கு முன்னர் பெயருக்குப் பெயரே எடுத்துக்காட்டிக் குறுகுதல் நிலைநாட்டப் பட்டது என்றாலும் வினைச்சொற்களின் குறுக்கம் இதை இன்னும் தெளிவாக மக்களுக்குக் காட்டவல்லவை.
\சூரியன்< சூடியன் ( சூட்டியன்) என்பதும் டகர ஒற்று இழந்து சூடியன் என்பதில் டி என்பது ரி ஆகிற்று.
இஃது வாக்கிய நிலைமொழி வருமொழிகளின் ஏற்படும் புணர்ச்சி அன்றாதலின் டகர ஒற்று தோன்றுமா பின் மறையுமா என்பது தேவையற்றது என்பதே சரியாகும். இதில் டகர ஒற்று தோன்றவேண்டாம்.
நெருப்பும் சூடும் சூரியனிலிருந்து வருபவை என்று பண்டை மக்கள் அறிந்திருந்தனர்.
எனவே தினம் என்பதும் தீ இன் அம் என்ற பகவுகளின் புணர்வே ஆகும். இதைப் பிறரும் கூறியுள்ளனர்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்