புதன், 28 பிப்ரவரி, 2024

கணவனும் புருடனும் ( புருஷன்)

 கண்போன்று இணைந்திருப்பவன் கணவன்.

புருவம் போன்று இருந்து காப்பவன்: புருடன். சொடுக்கி வாசிக்க:

https://sivamaalaa.blogspot.com/2016/03/blog-post_37.html

புல்லுதல் -  பொருந்துதல்.

புல் > புரு  என்றும் திரியும்.  

புருவம் -  பொருந்தியிருப்பது,  அதாவது விழியுடன் பொருந்தியிருப்பது. விழியுடன் என்று வருவிக்கப்பட்டதால்,  காரண இடுகுறி.

புரு>  புருடு,

டு என்பது ஒரு சொல்லாக்க விகுதி,  குருடு, வருடு,  திருடு என்று பலசொற்களிலும் வரும்.

இந்த விகுதி எப்படி உண்டானது என்பது  ஆய்வில் இன்னொன்று.   பின் தனி இடுகை எழுதரச் செய்வோம்.

புருடன் -  பெண்ணுடன் பொருந்தியிருப்பவன். பெண்ணுக்கே முதன்மை;  அவளுடன் வந்து பொருந்திவாழ்வோனே புருடன்.  இது பெண்ணாதிக்க காலத்துச் சொல்.

இச்சொல் பின்பு  புருஷன் என்று திரிந்துவிட்டது.   பூசைமொழியிலும் உயர்ந்த இடத்தைப் பிடித்தது.  எடுத்துக்காட்டு:  புருஷசுக்தம்.  பெயர்களில் புருஷோத்தம் என்பதும் காண்க.

வழங்குதல்: c 1500  -  5000 BCE.

ஆகவே, மிகப் பழைய சொல்  ஆகும். சென்ற 100 ஆண்டுகளுக்கு முன் புருசன், பிரிசன் என்றெல்லாம்  சிற்றூர்ச்சொல்லாக வழங்கிற்று.  ஆகவே இந்தச் சொல் பேச்சுத் தமிழில் நீண்டகாலம் பயன்பாடு கண்ட சொல்லாகும். ஆங்கிலேயர் வருமுன் இருந்த பேச்சு மொழியை ஆராய வழியிருந்தால்  ஈடுபடுவீராக.  புர்சன் பொண்டாட்டி என்று இணைச்சொற்களாக வழங்கும். இப்போதுள்ள பேச்சுத்தமிழ் கலப்பாகிவிட்டது.

பிரியாத பெண் தன்மையினால்,  பெண் பிரியாள் எனப்பட்டாள்.  அது கடைக்குறையாக   பிரியா>  ப்ரியா  என்றானது.

பழங்காலத்தில் புருவமாக இருந்த கணவன், பின்னர் கண்களாகவே மாறிவிட்டது  தகுதியுயர்த்தம் ஆகும்.  

கணவன் கண்ணான பின்,  பெண்ணைக் கண்ணின் மணியாக உருவகித்தனர்.

புருஷ என்பதற்குப்  படைப்புக்காரணியானவன் என்ற பொருள் ஏற்பட்டது.  எல்லா உயிர்களுடனும் பொருந்தியிருத்தலால், புருஷ என்பதன் மூலம் நோக்க இன்னும் பொருண்மை கெடவில்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு: பின்னர்.

இணைந்திருங்கள்



செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

கோவிட் நட்ட ம்

 கோவிட் 19 வந்து பலதத நடாமகிவிட்டது. பொருள்கள் வைத்திருந்த இடத்ததிதபருந்த எல்லாமும் தொலைந்துவிட்டன.. மீதமிருந்த 4 பொருட்களுக்கு ஒருவர் சாயமிட்டுப் பளபளப்பாக்கிக் கொடுத்தார்.

அவை படததில் உள்ளன 

திங்கள், 26 பிப்ரவரி, 2024

வனஜாவின் ஒரு கவின் முகம்


 வனஜாவின் ஒரு தோற்றம் 





Last edited on 16042024
Re-edited 11052024 1732