திங்கள், 22 ஜனவரி, 2024

இராமர் எப்படி......?

 இராமர் எப்படித் தியாகி, எப்படித் தெய்வம் என்று வினவலாம்

இராமர் ஓர் அரசர்.  பட்டத்துக்கும் பதவிக்கும்  இடையூறு வரும் நிலையில் போட்டியாளனைப் பிடித்துச் சிறையில் போடாமலும்  தந்தைக்கு எதிர்வினை எதுவும் ஆற்றாமலும் பொறுமையுடனும் வனவாழ்வே தனவாழ்வென்று போய்விட்டார். தியாகமும் தந்தை சொல்லுக்கு மதிப்பளித்தலும் துன்பம் கண்டு துவளா நெஞ்சுரமும் அவருக்கு. .அடி எடுத்து வைத்ததுமே மனித நிலையைக் கடந்துவிடுகிறார். எல்லாம் எனக்கே என்று எதுவும் சொல்லவில்லை .அவருக்கு எதுவும் வேண்டும் என்று ஓலமிட வில்லை. அவர் வேண்டுதல் வேண்டாமை இல்லார். இறைப்பண்பின் வெளிபாடு இது. வள்ளுவனும் பாடிய பண்பு.

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.

இப்படியே வால்மிகியையோ கம்பனையோ படித்து அறிந்து கொள்ளுங்கள்.

Sumangalip Pujai kuzhuvinar


 இந்தப் படத்தில் தோன்றுகின்றவர்கள் சுமஙகலிப் பூசைகளைக் கோவிலில் நடத்தினார்கள்.

வசூலில் வந்த பணத்தையும் பயப்பற்று டன் பூசைக்கே பயன்படுத்தினார்கள்.

வசூல் பணம் வரவில்லை என்று சொல்லி அடகுக்கடையில் நகையை வைத்து  ஈடு செய்யும் நெருக்கடிகளை ஏற்படுத்தாமலும்  பிறழாமலும் இருந்த காரணத்தால் இவர்களுக்கு நாம் கடமைப் பட்டிருக்கிறோம்.

தலைமை தாங்குகிறவர்களுக்குப் பிறழச்சிகளால் பல துன்பங்களும் நோயும் கூட ஏற்பட்டு விடும்.

இறைப்பற்றும் தொண்டுள்ளமும் வாழ்க.

எல்லாப்புகழும் அம்மனுக்கே.

இராம நாமம் ஒங்குக.


ஈசன் (மாரீசன்)

மாரீசன் என்ற இராமயணப் பெயர் நினைவுக்கு வந்தது.

அதைத் தேடினேம்.    ( ஏம், ஓம் என  இரண்டும் வரலாம். ஏம் என்பது முன்னிலையாரை உளப்படுத்தாமல் சொல்லும் திறனுடையது).(  தேடினோம் என்று எழுதுவது தான் இப்போது பலரும் அறிந்து கடைப்பிடிப்பது ஆகும் ). 1,*

https://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_6492.html

இனி ஈசன் என்னும் சொல்லுக்கு இன்னொரு முடிபு கூறுவோம்:

ஈதல் -   தன் நிலையின் ஒப்புமை இல்லாதவருக்கு இயன்றது உதவுதலாம்.

இறைவற்கு இணை யாருமிலர். அவரே யாவர்க்கும் ஈந்து காப்பவர்.

ஈ+து+அன் > ஈ+ சு+அன்> ஈசன்.

உகரம் கெட்டது.

தகர வருக்கம் சகர வருக்கமாகும்

எ-டு: தனி > சனி

அத்தி > அச்சி  பாப்பாத்தி, செட்டிச்சி வண்ணாத்தி, ஆய்ச்சி

அத்தன் அச்சன் அத்தி அச்சி.


 இடுகைகளில் காண்க 

த் இடைநிலை ச் எனவாயிற்று.

தி > சி

இறைவர் ஈஷ்வர் திரிபுக்கு இது மற்றொரு முடிபு கூறியவாறு.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

குறிப்புகள்:

*நன்னூல் 140 (விகுதிகள்.)

அன் ஆன் அள் ஆள் அர் ஆர் ப மார்
அ ஆ கு டு து று என் ஏன் அல் அன்
அம் ஆம் எம் ஏம் ஓம் ஒடு உம் ஊர்
க ட த ற ஐ ஆய் இ மின் இர் ஈர்
ஈயர் கயவும் என்பவும் பிறவும்
வினையின் விகுதி பெயரினும் சிலவே