மீண்டும் வந்திடுமோ மகுடமுகி (கோவிட்டு)
தாண்டும் பொன்யுகமே எனமிகவும் ஏமாற்றம்!
ஆண்டில் சீர்வெற்றிக் காந்தவரும்
சென்றுவிட
யாண்டும் துயர்பெருக யாமே வருந்துகிறோம்.
அரும்பொருள்
வெற்றிக் காந்த் (விஜய காந்த்) என்னும் அரசியல் தலைவர் மறைவிற்கு வருந்துகிறோம் .கோவிட்19 மறுபடியும் வராத அந்த பொற்காலம், இனி வருமோ? நோய்வராது என்னும் பொற்காலம் வராதுபோனது பெரிய ஏமாற்றம் -- இது பாட்டின் பொருள்.