Well, when you like it, there is no problem!
A real friend......this dog.
Sweets for the sweet pet.
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
Well, when you like it, there is no problem!
A real friend......this dog.
Sweets for the sweet pet.
இங்கு இது புதுவதாய் ஆராய்வோம்.
உது என்பது சுட்டடிச் சொல். உகரமுதலானது.
உது என்றால் முன்னிருப்பது, முன் கொணர்வது என்று பொருள்.
உது > உத்து.
இங்கு தகரம் இரட்டித்தது. அதாவது து என்பது த்து என்று அழுந்தி வெளிவந்தது. அது என்பது அத்து என்று தோன்றிச் சிலவிடத்துச் சாரியையாவும் வருதல் போலும்.
உத்து: பொருள் "முன் கொணர்ந்தது."
உத்து > உச்சு. இது தகர சகரத் திரிபு அமைதல்.
இனி அரு என்றால் அருகில் இருப்பது
அரு + இ : > அரி. அருகில் இடுதல், வைத்தல்.
உச்சு + அரு + இ > உச்சரி > உச்சரித்தல் ( வினைச்சொல்_-)
முன் கொணர்ந்து அருகிலாக்குதல். defining for you.
நாவின் மூலம் முன் கொண்டுவந்து அருகிலமைத்தல்.
முன் இதன் ( அரு + இ) பொருண்மையை ஆய்வறிஞர் சிலர் கண்டுகொள்ளாமல் விலகிச் சென்றுவிட்டதால் இது விளக்கமுறா தொழியலானது. இதனை இங்கு உளப்படுத்தியுள்ளோம். இது கணக்கில் விடுபாடு போலவே.
Pro-nounce என்பதில் உள்ள முன்னொட்டும் இப்பொருளதே என்பது மகிழ்விக்கிறது.
உ - முன்மைப் பொருள்.
அரு இ - அண்மைப் பொருள்.
இரட்டைப் பொருத்தம் ஆகிவிட்டது.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
இலையைத் தருவது கொடி.
இலை > ல.
தரு(வது) > தா.
ல+ தா > லதா. என்றால் இலையைத் தரும் கொடி.
தமிழ் மூலம் மெய்ப்பிக்கப்பட்டது.
பேச்சு :
இலை - எல - ல (என்று பலுக்குவர்.)
தரு - வினைப்பகுதி. தா என்பது ஏவல்வினை
பலுக்குதல் - உச்சரித்தல்.
அறிக மகிழ்க
மெய்ப்பு: பின்.