After worshipping Sri Sivan, devotees worship Sri Durga for spiritual peace and grace.
எமையாளும் இறைவிநீ துர்க்கை யம்மா
என்றும்நீ துணைசெய்வாய் எம்மில் நின்றே
சுமையாக வருந்துன்பம் சுருண்டு வீழச்
சோர்வகற்றிக் கூரறிவு சூழத் தந்தாய்!
--- சிவமாலா
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
After worshipping Sri Sivan, devotees worship Sri Durga for spiritual peace and grace.
எமையாளும் இறைவிநீ துர்க்கை யம்மா
என்றும்நீ துணைசெய்வாய் எம்மில் நின்றே
சுமையாக வருந்துன்பம் சுருண்டு வீழச்
சோர்வகற்றிக் கூரறிவு சூழத் தந்தாய்!
--- சிவமாலா
தீபாவளியைப் பற்றிய விளக்கங்கள் உலகிற் பல உள்ளன. சமண மதத்தினர் கூறும் விளக்கம் ஒன்று, புத்த மதத்தினர் சொல்வது இன்னொன்று, இந்து சமயத்தினர் கண்டது வேறொன்று, வரலாறு சொல்ல வருவோன் வரைந்து வைத்தது மற்றொன்று என்று இவை பலவென்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இவை அனைத்தையும் படித்துப் பேசிக்கொண்டிருப்பது சிலர்க்கு வாடிக்கையும் வேடிக்கையும் ஆகும்.
மற்றவன் சொல்வதுதான் உம்மை ஆளும் தன்மை உடையதா? அவன் சொல்வது எதுவாயினும் உமக்குச் சொந்தப் புத்தி இல்லையா என்று எண்ணிப்பார்த்தால் உமது வலிமையின்மை உமக்கு விளங்கிவிடும்.
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்
என்றார் தேவர் தம் இனிய திருக்குறளில்.
இதன் பொருளை மணக்குடவர் என்னும் பண்டை உரையாசிரியர் சொல்லும் உரையுடன் உற்றுநோக்கி அறிவோமாக.
கமம் சொல்:
கமம் அல்லது அதன் அடியாக உள்ள கம் என்ற ஈரெழுத்து ஒரு சொல், இன்று வழக்கில் இல்லை. இதைப் பழைய நூல்களில் ஈரெழுத்து ஒரு மொழி என்பார்கள். மொழி என்ற சொல் இந்நாட்களில் language என்ற பொருளில் வழங்குகிறது. அதனால் மொழி என்பதைச் சொல் என்பதற்கு ஈடாக இங்குப் பயன்படுத்தவில்லை. இற்றை மொழி பெரிதும் மாறுபட்டுள்ளது. புறநானூற்று மொழியில் எழுத முடிந்தாலும் எழுதினால் பொருள் மாறுபட்டு அறியப்படலாம் ஆகையால் தவிர்த்தலே நன்று. பொருள்கூறுதற்குரித்தான வாய்ப்பில் கூறுதல் ஏற்புடைத்தாகலாம்,
கமம் என்ற சொல்லின் பகுதி அல்லது அடி, கம் என்பது. இது கும் என்பதன் திரிபு என்று சொல்வதும் ஏற்புடையதே, கும், குடும் , ( குடுமி) ( குடும்பம்) , கும்> கம் > கமம் என்று புரிந்துகொள்க. அகர வருக்கச் சொற்கள் ஒன்று மற்றொன்றாக மாறும் தன்மை உடையன. பழைய இடுகைகளில் கண்டு தெளிக. அகர வருக்கம் என்றால் அ முதல் ஔ வரை உள்ளவை.
அடு குடு என்பவற்றில் பொருள் அணிமையையும் கருத்தில் கொள்ளவேண்டும். அடுத்துச் செல்வது முன் நடப்பது. குடு> கூடு என்பதில் அடுத்து செல்லும் எதுவும் கூடித் திரள்கிறது என்பதை உணர்ந்தால் இவற்றில் உள்ள பொருள் அணுக்கம் தெரிந்து விடுவதோடு திரிதன்மைகளையும் உணர்ந்து கொள்ளலாம்.
க என்பது க்ர என்று பூசைசெய்வோர் மொழியில் திரியும். இது இயல்பு.. பிற புற என்பன ப்ர என்றாகும். "புற கு ஆரம்" என்றால் புறத்தே இணைந்து சூழவருதல்.
ஆர்தல் என்றால் சூழ்வருதல். ஆர் > ஆரம். அம் விகுதி பெற்ற சொல்.
மறைமொழி மக்கள் தாம் கூறுவன தெளிவு தேடியறியத் தக்கனவாய் இருத்தலை விரும்புதல் உலகெங்கும் காணப்படுவது ஆகும். மலாய் சீனம் என்று எம்மொழியாரிடமும் இது காணப்படுகிறது. இது அவர்களின் பெருமைப்படக் கடைப்பிடிக்கும் நடவடிக்கை. நிறைமொழியார்க்கு மறைமொழி உயர்வாகும்.
கீழ்க்காணும் இடுகையைப் படித்து மேலும் அறிக.
குறிப்புகள்:
கிராமம் முதலிய சொற்கள்: