வெள்ளி, 24 நவம்பர், 2023

கிராமம். சொல்லமைப்பு

 கமம் சொல்:

கமம் அல்லது அதன் அடியாக உள்ள கம் என்ற  ஈரெழுத்து ஒரு சொல், இன்று வழக்கில் இல்லை.  இதைப் பழைய நூல்களில் ஈரெழுத்து ஒரு மொழி என்பார்கள்.  மொழி என்ற சொல்  இந்நாட்களில்  language  என்ற  பொருளில் வழங்குகிறது.  அதனால் மொழி என்பதைச் சொல் என்பதற்கு ஈடாக இங்குப் பயன்படுத்தவில்லை. இற்றை மொழி  பெரிதும் மாறுபட்டுள்ளது.  புறநானூற்று மொழியில் எழுத முடிந்தாலும் எழுதினால் பொருள் மாறுபட்டு அறியப்படலாம் ஆகையால்  தவிர்த்தலே நன்று.  பொருள்கூறுதற்குரித்தான வாய்ப்பில் கூறுதல் ஏற்புடைத்தாகலாம்,

கமம் என்ற சொல்லின் பகுதி அல்லது அடி,  கம் என்பது.  இது கும் என்பதன் திரிபு என்று சொல்வதும் ஏற்புடையதே,   கும், குடும் , ( குடுமி) ( குடும்பம்) , கும்> கம்  >  கமம்  என்று புரிந்துகொள்க.  அகர வருக்கச் சொற்கள் ஒன்று மற்றொன்றாக மாறும் தன்மை உடையன. பழைய இடுகைகளில் கண்டு தெளிக. அகர வருக்கம் என்றால்  அ முதல் ஔ வரை உள்ளவை.

அடு  குடு என்பவற்றில் பொருள் அணிமையையும் கருத்தில் கொள்ளவேண்டும்.  அடுத்துச் செல்வது முன் நடப்பது.  குடு>  கூடு என்பதில் அடுத்து செல்லும் எதுவும் கூடித் திரள்கிறது என்பதை உணர்ந்தால் இவற்றில் உள்ள பொருள் அணுக்கம் தெரிந்து விடுவதோடு  திரிதன்மைகளையும் உணர்ந்து கொள்ளலாம்.

க என்பது க்ர என்று பூசைசெய்வோர் மொழியில் திரியும்.  இது இயல்பு.. பிற புற என்பன ப்ர என்றாகும்.  "புற கு ஆரம்"  என்றால் புறத்தே இணைந்து சூழவருதல்.

ஆர்தல் என்றால் சூழ்வருதல்.   ஆர் > ஆரம்.  அம் விகுதி பெற்ற சொல்.

மறைமொழி மக்கள் தாம் கூறுவன தெளிவு தேடியறியத் தக்கனவாய் இருத்தலை விரும்புதல் உலகெங்கும் காணப்படுவது ஆகும்.  மலாய் சீனம் என்று எம்மொழியாரிடமும் இது காணப்படுகிறது. இது அவர்களின் பெருமைப்படக் கடைப்பிடிக்கும் நடவடிக்கை.  நிறைமொழியார்க்கு மறைமொழி உயர்வாகும்.

கீழ்க்காணும் இடுகையைப் படித்து மேலும் அறிக.

குறிப்புகள்:

கிராமம் முதலிய சொற்கள்: 

https://sivamaalaa.blogspot.com/2020/01/blog-post.html

வியாழன், 23 நவம்பர், 2023

காக்கைகுத் தெரிந்த கடவுள்

(இணைக்குறள்  ஆசிரியப்பா.) 

இது சில அடிகள் குறைந்தியன்ற ஆசிரியப்பா.


பதுமநா  பசாமி கோவில்  திருமுன்

ஒதுங்கி நின்ற நோயுற்ற காக்கை:

சாமியை  நோக்கி

தவம்செய நிற்பது  போல்நிற்   கிறது.

என்ன  வென்று  வினவலாம் என்று

முன்னில்  அணுகிட

ஒன்னும்  விளங்க  வில்லை.

என்னவோ விண்ணப்பம் 

தெரியவும் இல்லை.

எனக்கேன் தெரிய   வேண்டும் என்று

தனக்குள் நினத்துக் கொண்டதோ?

விரட்டினாலும் போகவும்  இல்லை. 

கடவுளை அறிந்தது காக்கை,

மடமுறு மனிதன் தடமறி  யானே


பொருள்:

( மிரட்டு விரட்டு)

திருமுன் - சந்நிதி முன்.

பதும நாப -  பத்ம நாப

மடமுறு -  அறியாமை கொண்ட

தடம் -  செல்நெறி.  போகும் பாதை.



செவ்வாய், 21 நவம்பர், 2023

கிரகம் என்ற சொல் அமைப்பு

 கிரகம் என்பது இரகம் என்பதன் பிரிப்புத்திரிபு  ஆகும்.

இரு  அகம் -  இரகம் -  கிரகம்.

இருப்பதற்கான அகம் என்பது வீடு.  அதுதான் இரகம்.

கார் இரு அகம் -  காராகு இரு அகம் -  காராகிரகம்,  ~ கிரகம் ஆனது.

பிரித்ததில் வந்த சொல்.  பிறழ்பிரிப்பு  என்னலாம்.

இரகம்  ( இருஅகம்,  இருக்கும் வீடு)  என்பது  அக்கிரகாரம் என்ற சொல்லிலும் உள்ளது;  https://sivamaalaa.blogspot.com/2016/06/blog-post_86.html

அஃகு + இரக(ம்) + ஆர்(தல்) + அம்>  அக்கிரகாரம்.[ ஃ இங்கு  க்  ஆனது. ]

குறைந்த மனைகள் உள்ள பகுதி.  சிறிய சுற்று எல்லை உடையது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.