(இணைக்குறள் ஆசிரியப்பா.)
இது சில அடிகள் குறைந்தியன்ற ஆசிரியப்பா.
பதுமநா பசாமி கோவில் திருமுன்
ஒதுங்கி நின்ற நோயுற்ற காக்கை:
சாமியை நோக்கி
தவம்செய நிற்பது போல்நிற் கிறது.
என்ன வென்று வினவலாம் என்று
முன்னில் அணுகிட
ஒன்னும் விளங்க வில்லை.
என்னவோ விண்ணப்பம்
தெரியவும் இல்லை.
எனக்கேன் தெரிய வேண்டும் என்று
தனக்குள் நினத்துக் கொண்டதோ?
விரட்டினாலும் போகவும் இல்லை.
கடவுளை அறிந்தது காக்கை,
மடமுறு மனிதன் தடமறி யானே
பொருள்:
( மிரட்டு விரட்டு)
திருமுன் - சந்நிதி முன்.
பதும நாப - பத்ம நாப
மடமுறு - அறியாமை கொண்ட
தடம் - செல்நெறி. போகும் பாதை.