சிபாரிசு என்ற சொல்லை இப்போது பார்ப்போம். இதைச் சிற்றூரார் "சிவாரிசு" என்று திரித்து ஒலிப்பர். இது யாது என்று சொல்லாராய்ச்சியாளனை இது மருட்டும், பிற மொழியோ என்று மயங்கச் செய்யும்.
இங்குச் சி என்ற ஒற்றை எழுத்தாய் இருப்பது " சீர் " என்ற சொல்லேதான்.
சீர் அரங்கம் என்பது சீரங்கம் ஆனது காண்க. மரூஉ.
அடுத்து " பார் " என்ற சொல் வருகிறது.
கடைப்பாகம் : இது என்பதன்றி வேறில்லை. தகர வருக்கம் சகர வருக்கமாகும். அதன்படி, இது என்பது இசு என்றாகிவிட்டது. தனிச்சிறப்புடைய காரி, தனி- சனி என்றானது போலுமே. கோள்களில் ஈசுவரப் பட்டமுடையது சனி.
எழுத்துக்கள் சொல்லியன்முறையில் திரிந்துள்ளன.
"சீர்பாரிது!" என்பது சிபாரிசு ஆனது. சிவ்வாரிசு என்று திரித்துச் சொல்வார்கள். ஓர் ஓலையில் நல்லதொன்றிருந்தால், அடுத்தவரிடம் குறிப்பாக எழுதியனுப்ப : " சீர் பார் இது" என்பது இனிய வேண்டுகோள் ஆகும்.
இது உண்மையில் ஒரு வாக்கியத்தின் மரூஉ ஆகும். இற்றைச் சொல் : பரிந்துரை.
சீர்ச்சை என்ற சொல் மறைந்து சிகிச்சை என்றானது போலும் ஒரு திரிபு இது. ஆனால் சீர்ச்சை என்பது வாக்கியம் அன்று. ஒரு சொல்; சை என்பது விகுதி.
இதையும் வாக்கியம் ஆக்கலாம்: சீர்செய் > சீர்ச்செய்> சிகிச்சை. என்று. செய் என்பதை முதனிலைப் பெயர் என்னலாம். ஒரு வினைச்சொல்லின் பகுதியே நின்று பெயரானது. தண்செய் > தஞ்சை என்பதும் இத்தகையதே. இதில் செய் என்ற வினைச்சொல் நிலங்குறித்துப்பெயரானது.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.