பத்திரம் என்ற சொல்லை பிற எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும் ஆய்ந்துள்ளனர். இச்சொல் சங்க த் தமிழிலக்கியத்தில் வந்துள்ளது என்று எடுத்துக்காட்டி யுள்ளனர்.
இதன்மூலம் பத்திரம் என்பது பழம்பயன்பாடு உடைய சொல் தெரிகிறது.
பத்திரம் என்பது பேச்சுவழக்கிலும் இன்றுமுள்ள சொல் ஆகும்.
பத்திரம் என்ற சொல்லின் அடிப்படைப் பொருள் இலை அல்லது ஓலை என்பதுதான். என்னென்ன வகைப் பத்திரங்கள் உள்ளன என்பதை இங்கு நாம் இப்போது கூறவில்லை.
இலை அல்லது ஓலை என்ற பொருளிலிருந்து இன்று அது ஆவணத்தைக் குறிக்க வழங்குகிறது. பத்திரம் என்பதன் மற்றொரு வடிவமான பத்திரிகை, (பத்திரிக்கை) என்பதும் தொடக்கத்தில் இலை என்றே பொருள்பட்டாலும், இப்போது தாளிகை என்ற பொருளில் பயன்படுகிறது. நாளிதழ், வார இதழ், மாத இதழ் என்று பல வெளிவருகின்றன. பத்திரிகை என்பது இவற்றுள் எதையும் அன்றாடப் பயன்பாட்டில் குறிக்கலாம்.
இலையானது கிளையைப் பற்றி இருக்கிறது. பற்றி இருக்கை > பத்தி இருக்கை> பத்திரிக்கை > பத்திரிகை என்றே சொல்லே இது. சமத்கிருதம் என்ற மரத்தடிச் சாமியார் புனைவு மொழியும் இதையே பயன்படுத்துகிறது. இது காரண இடுகுறிப்பெயர்.
பற்றி இரு அம் > பத்தி இரு அம் > பத்திரம் ஆகும்.
காலில் மஞ்சள் பற்றுப் போடுவதை பத்துப் போடுவது என்பதில்லை. இவ்வாறு திரிந்த சொறகள். அவற்றை பழைய இடுகைகளில் விளக்கியுள்ளோம்.
கிருதமென்பது மரத்தடிப் பூசாரிகள் மொழியாக இருந்தமையின், அவர்களும் அதைப் பயன்பாடு செய்தனர்..
முற்றுதல் > (முத்து-தல்)> முத்து> (இடைக்குறைந்து) > முது > முது இர்> முதிர்.
இத்தகைய திரிபுகள் பல. பலப்பல. சில திரிபுகளில் நுண்மைவேறுபாடு வழக்கில் எழுவது.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்