சனி, 18 டிசம்பர், 2021

அம்மாவுக்குக் கொடுத்த திண்ணப்பம்: "கேக்"


 அம்மாவுக்குப் பிறந்தநாள் என்றால்

அன்புப் பரிசொன்று நலமாகுமே!  ---  ஓர்சீமை

அப்பமென்றால் பாசம் பலமாகுமே!


படத்தில் இவ்வப்பம் பாருங்களேன் ---  காணப்

பரிய  தப்பம்நா வூறும் இதே! ---  உண்ண

வாரீரோ இனிமை சேருங்களே.

வெள்ளி, 17 டிசம்பர், 2021

பாட்டிக்குப் பேத்தி - தொலைவுப் பரிசு.

 உடனே வந்து பிறந்தநாளன்று  பார்க்காவிட்டாலும், ஒரு சிறுகூடை,    பூக்களை அனுப்பினாலும் போதுமே,  அந்தப் பூக்களின் மலர்ச்சியில் பேத்தி, தன் பாட்டிக்குக் காட்டும் அன்பு பளிச்சிடுமே.  இக்காலங்களில் பேத்தி ஓரிடத்திலும் பாட்டி இன்னோர் இடத்திலும் கோவிட் தொற்றுத் தடுப்புக் கட்டுப்பாடுகளால்  - உலகின் வெவ்வேறு பாகங்களில்கூட இருக்கலாம்.

தேவர்செய் குறளில் கூறியதுபோன்று,  அன்பிற்கும் உளதோ அடைக்கும்தாழ்?










சிவமாலா செய்த பூசை


 படம்:  இங்கு ஐயப்பசாமிக்குச் சிவமாலா பூசை செய்கின்றார்