வியாழன், 2 செப்டம்பர், 2021

யாசித்தல் சொற்பிறப்பு

யாசித்தல் என்பது பற்றி கொஞ்சம் எழுதுவோம்.  நேரம் கிடைக்கும்போது விடுபாட்டில் வீழந்தன திரட்டி இன்னோர் இடுகை இயற்றலாம்.

ஆசு என்றால் பற்றுக்கோடு.  அதாவது ஆதரவு.  

ஆதரவு என்றாலும் இருபொருள்

ஆவை (பசுவை)த் தந்து ஒருவனைக் குடியமர்த்தி  அரவணைத்துக் கொள்ளுதல். இவ்வாறு நிலக்கிழார்களும் மன்னர்களும் செய்தல் கூடும்.

Now this is used only  in the general sense of 'support'.  Please see below:

ஆ  -  தன்னால் ஆனதைத்,  தரவு -  தருதல்.  தரு + வு :  தரவு.  ( தருவு என்று வராது).

ஆசு என்பது ஆதல் என்ற அடிப்படை வினையில் எழுந்து சுகர விகுதி  பெற்ற சொல்.   சு விகுதி பெற்ற இன்னொரு சொல்:  பரிதல் வினையில் எழுந்த : பரி > பரிசு.  விரிசல் என்ற சொல்: விரி + சு + அல்:  சுகரத்தை இடைநிலையாகவோ விகுதி யாகவோ வைத்துக்கொள்ளலாம்.  விகுதி எனின் இங்கு இரட்டை விகுதி ஆகும்.  இடைநிலை என்று விளக்குதல் உணர எளிதாகவிருக்கும். No substantial difference. It is how to interpret.  Both interpretations are acceptable. 

ஆசு என்பது ஒரு வினையாக்க விகுதி பெற்று  ஆசி என்று வரும்.

இதன் பொருள் ஆசு அல்லது ஆதரவு வழங்குதல்.  பின்னர் ஆது வாழ்த்துதலையும் குறித்து, முன் பொருள் இழக்கப்பட்டது.  இதற்குக் காரணம் இனாம் வழங்கியவர்கள்,  வாழ்த்துதலையும் அளித்ததுதான்.  " ரொம்ப நன்றி ரொம்ப நன்றி " என்று காலில் விழுந்தால், " நல்லா இரு" என்பார் இனாம் தந்தவர்.  வேறு என்னதான் செய்வது?

இ என்பது முன் காலமுதல் வினையாக்கம் குறித்துள்ளது.

ஆசு ( பெயர்ச்சொல்) >  ஆசி ( இ விகுதி பெயர்ச்சொல்).

ஆசு >  ஆசு + இ > ஆசி > ஆசித்தல்.    ( மேல் பெயர் ஆனது மீண்டும் வினைவடிவம் கொண்டது).

முயற்சி > முயற்சித்தல்  என்பதுபோல  .  சில வாத்தியார்கள் இவ்வாறு ஒரு சொல்லே இல்லை என்பர்.   சரிதான்,  ஆனால் சரி இல்லை.  மொழி வரலாற்றில் பல பெயர்கள் வினையாகி உள்ளன.  பழைய இடுகைகளில் காண்க.

எ-டு:  வரி  ( கோடு).  வரித்தல்:  கோடு போல அலங்காரம் வரைந்து பெண்ணை மணந்துகொள்ளுதல்.   ( ஒரு பழங்கால வழக்கம்).  வரி > வரன்:  அப்படி வரி எழுதி மணக்கும் மணமகன்.  ( பிற ஆய்வாளர் கூற்று. ).

இவ்வாறு மீண்டும் வினையாகும்.

 Necessity is the mother of invention

ஆனை > யானை.

ஆமை > யாமை.

ஆங்கு > யாங்கு.

இதுபோலவே, திரிந்து,   ஆசி > யாசி > யாசித்தல்.

யாசித்தல்:  இரத்தல்.  இரத்தலும்  பொருள் வேண்டுதல்தான்.  பொருள் வேண்டினால் ஆதரவு தேடுதல்தான்.  இவ்வேற்றுமைகள் பெரியவை அன்று.

 Used with contextual difference. That is all. Nuance related.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்




Real Marana Dance Virus Explained | Tamil | Madan Gowri | MG

புதன், 1 செப்டம்பர், 2021

முடிமணியாகச் சூடிக்கொள்ளுங்கள்

 மற்றபல பேச்செழுத்து மாண்பின் கற்று

வந்ததனால் வந்ததிகழ் வரவு தன்னால்

பெற்றதமிழ் தன்னைமிகப் பேண எண்ணிப்

பெருக்கிடுமோர் பெய்முகிலாய்ப் பிறங்கும் இந்த 

உற்றசிவ மாலைதரு வலைத்த   ளத்தை

உங்கள்நறும் பித்தைமணி யாகச் சூடும்

பற்றுளமே பயனூறிப்  பயில்க வாழ்வே.

பரந்துலகத்  தமிழ்துலங்கும்  பரிதி வாழ்வே.  


அரும்பொருள்


பல பேச்செழுத்து -  பல மொழிகள்.

மாண்பில் -   நல்லபடியாக.

கற்று வந்ததனால்  -- கற்றுப் பெற்ற அறிவால்

வந்த திகழ் வரவு  -   பெற்ற வருமானம்

தன்னால்  -  அதனால்.

பெற்ற தமிழ் தன்னை -  இத் தாய்மொழியாகிய தமிழை

பேண எண்ணி -  வளர்க்க எண்ணி,

பெருக்கிடுமோர் -   வளர்த்திடும் ஒரு

( ஓர் என்பது ஒரு என்று இங்கு வரத்தேவையில்லை.  இது கவி )

பெய் முகிலாய் -  மழை பெய்யும் மேகம்  ( போல)

பிறங்கும்  -   ஒளிவீசும்,

 

உற்ற சிவமாலை தரு -  உள்ளுறவு பூண்ட சிவமாலா தருகின்ற

வலைத்தளத்தை  ---

உங்கள் நறும் பித்தை மணி -  உங்கள் தலையில் அணியும் ஒரு

முடி மணியாக,   [  பித்தை -  முடியணி தங்கப் பிடிப்பு.]

தங்கத்தினாலான பிடிப்பு:  பிடிப்பு  ( ஆங்கிலத்தில் கிளிப்)

சூடும் உளப்பற்று தனக்கு  ---  நீங்கள் அணிகின்ற உள்ளத்துப் பற்றுதலுக்கு

ஊறி  -  ஊற்று போல மிகுந்து,

உயர்க வாழ்வே.--- உங்கள் வாழ்வு வளம்பெறுக,


பற்றுளமே பயனூறிப்  பயில்க வாழ்வே--- உலகெங்கும் தமிழ்

தழைக்குமானால் வாழ்க்கை  மேம்பாடு அடையும்,

பரந்துலகத்  தமிழ்துலங்கும் ------ விரிந்து உலகத்தமிழ் விளங்கும்

 பரிதி வாழ்வே.  --- சூரியன்போல் வாழ்வு ஒளிரும்,

  (ஓங்கும் வாழ்வே.  )

என்றவாறு.


சிவமாலா தளம் தமிழைப் போற்ற,  அதனால் உங்கள் மனம் மகிழ,

அம்மகிழ்வினால் மற்ற துறைகளிலும் நீங்கள்  நன்றாகச் செயல்பட,

எல்லாம் மேம்பாடு அடையும்  என்பது கருத்து.


உள்ளம் மகிழ்ந்தால்தானே வாழ்வு சிறக்கும் என்பது.