By Sivamala
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
ஞாயிறு, 25 ஜூலை, 2021
The copy delete passion (English )
By Sivamala
சனி, 24 ஜூலை, 2021
பரிதாபம் சொல்.
பரிதாபம் என்ற சொல்லைப் பார்ப்போம்.
இதில் இரண்டு தமிழ்ச் சொற்கள் உள்ளன. ஒன்று பரிதல், இன்னொன்று தவித்தல். இரண்டையும் திறமையாக ஒட்டுவதன் மூலம் ஒரு புதிய சொல்லைப் படைத்து உலவ விட்டுள்ளனர். இவ்வாறு கூறுகையில், சொல் மக்கள் படைப்பா அல்லது புலவர் புனைவா என்று கேட்டால், இது சிற்றூர் மக்களிடம் வழங்கிப் பின்னர் அயல்வழக்கிலும் ஆணியடித்ததுபோல் உட்கார்ந்துகொண்டிருக்கிறது என்பதே சொல்லற்குரியது ஆகும்.
யாராவது எந்தக் காரணத்துக்காகவாவது தவித்தால், அவர்மேல் ஒரு பரிவு ஏற்படுவது ஒரு மனிதத்தன்மை ஆகும். இதைத்தான் பரிதாபம் என்று சொல்வர். பிள்ளைகளுக்கு வேண்டியதைச் செய்ய முடியாமலோ, கணவனைப் பிரிந்ததாலோ துயரத்தில் வீழ்ந்தோர் பலர். " பரிதாபமில்லையா, பரலோக மாதா! " என்பது ஒரு பழைய துயரப்பாட்டு. பரதேசி ஆனோம் என்று வரும் அந்தப் பாட்டு. யாரும் பரதேசி ஆகாமல் பார்த்துக்கொள்வதே மனித நேயம்.
தவித்தல், ஒரு வினைச்சொல். தவி + அம் > தாவம். இதில் தவி என்பது தன் இகரம் இழந்து தவ்+ அம் > தாவம் என்று முதலெழுத்து நீண்டு சொல் உண்டானது. இச்சொல் பின் வ- ப பரிமாற்றத் திரிபின்படி தாபம் ஆகும்.. பகரம் வகரம் ஆவதைப் பல சொற்களில் காணலாம். பசந்த > வசந்த என்பதும் பகு> வகு என்பதும் நினைவுக்கு வருகின்றன.
வரு > வாராய் . இது பாரோ என்று கன்னடத்தில் திரியும்.
வேகமாய் > பேகன என்று அம்மொழியில் திரியும்.
இவை பகர வகரத் திரிபுகள்.
சில ஜெர்மன் - பிரித்தானியத் திரிபுகளும் இவ்வாறே.
இது பல உலக மொழிகளில் காணப்படும் திரிபுவகை.
ஆபத்து என்பதைத் தமிழருள் சிலர் ஆவத்து என்று பேசிக் கேள்விப்பட்டிருக்கிறோம். பெரும்பாலும் படிக்காதவர்களிடம் இது காணப்படும். இப்போது குறைந்துவிட்டது.
வாளி ( Tam) - பல்டி baldi (Malay).
பழைய இடுகைகளில் பல காணலாம். முதலெழுத்து நீள்வதை, வரு > வாரம் என்பதில் காண்க. படு > பாடு என்பதிலும் , படி+ அம் > பாடம் என்பதிலும் காண்க. வாக்கிய வார்த்தைகள் புணர்வு வேறு; சொல்லாக்கப் புணர்வு வேறு. நடி+ அகம் > நாடகம் என்பதுமது.
பரி என்ற சொல் பரி என்றே நின்றுவிட்டது. பரிதாபம்: பரிகின்ற தாப நிலை.
இது ( பரி) ----- அயலில் முன்னொட்டாகக் கொள்வர்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
குறிப்புகள்:
வரு> வார் > வார்த்தை. ( வாயினின்றும் வரும் ஒலி).
வாய் > வாய்த்தை > வார்த்தை. ( திரிபு).
இதைப் பல வழிகளில் காட்டலாம்.