இந்தியாவில்
சீன அதிபர்
கவிதை.
சீன அதிபரும்
இந்தியா வந்துளார்
காணச்
செவிகொள மாணுறு செய்தியே
எல்லையில்
கோடே துளதொரு தொல்லையும்;
ஒல்லுறு
வாணிபத் தொருபக வோங்கலும்
கொல்படைத்
தீவிர வாதி குறும்பொடு
பல்பொருள்
பேச்சுக் கணிசேர் பயனே
அதிபர்
அவரெனின் சீன உணவர்
புதியன
தென்னாட் டுணவுமுன் வைக்கவும்
ஏற்றார்
சமையலைப் போற்றினர் உண்டனர்
ஒன்றும்
தயக்கமே கொள்ளுதல் இன்றியே
நன்று
திசையூண் நயந்தனர் வெற்றியே
மாமல்லை
வந்த மணிபொங்கு மன்னவர்க்குத்
தஞ்சையின்
கோழிக் கறியும் இறைச்சியும்
நண்டும்
நனிபல பக்கக் கறிகளொடு
விஞ்சும்
சுவைத்தே விழுஅடைக் காய்ச்சி
விருந்திற்
கொடுத்தே அருந்த அழைத்தனர்
இந்திய
நாட்டின் இனியவர் மோடி
உணவும்
உரைகளும் முற்றுப் பெறவே
இணையில்
தலைவர்நம் சின்பெங்கும்
சென்றுளார்
வானிடை
ஏறியே சீனமும் நோக்கியே
மாணமைதி
ஞாலம் பெறும்.
அரும்பொருள்:
எல்லையில் கோடே து --- சீன இந்திய எல்லையில் எல்லைக்கோடுகள்
வரையறை செய்யப்படவில்லை இன்னும்.
உளதொரு தொல்லையும் - அதனால் புரிந்துணர்வுகள் வேறுபட்டுத் தொல்லைகள் உள்ளன. இது நிலைமை.
ஒல்லுறு - நடைபெறுகின்ற
எல்லையில் கோடே து --- சீன இந்திய எல்லையில் எல்லைக்கோடுகள்
வரையறை செய்யப்படவில்லை இன்னும்.
உளதொரு தொல்லையும் - அதனால் புரிந்துணர்வுகள் வேறுபட்டுத் தொல்லைகள் உள்ளன. இது நிலைமை.
ஒல்லுறு - நடைபெறுகின்ற
ஒரு பகவு ஓங்கலும் - ஒரு நாட்டின் பக்கம் வர்த்தகம் சாதகமாயிருப்பதும்
உணவர் - பழக்கமான உணவு கொள்பவர்.
விஞ்சும் - மிகுதியாகும்.
அடைக்காய்ச்சி - அடைப்பிரதமம்
மாணமைதி - சிறந்த அமைதி.
ஞாலம் - உலகம்.
திருத்தம் பின்