உடலுறுப்புகளில் எவையும் தாழ்வு என்று ஒதுக்கிவிடுதல் இயலாது. எல்லாவற்றுக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும் மொழியில் பெயருள்ளது. மருத்துவ அறிவியலில் இன்னும் ஆழ்ந்த நிலையில் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. அவற்றுக்கு வரும் நோய்களுக்கும் ஆங்கிலத்தில் பெயர்கள் உள்ளன. தமிழ் வைத்தியத்தில் நமக்குக் கிடைத்த நூல்கள் சிலவே. இருப்பினும் மருத்துவப் பெயர்கள் உள்ளன. கோரோசனை என்ற பெயர்கூட உள்ளது. அது ஈரலில் மாடுகட்கு ஏற்படும் கல்லைக் குறிக்கின்றது. இதுபோலும் பெயர்களைத் தொகுத்தளிக்கும் அகரவரிசைகள் இருந்தன. யாம் அண்மையில் இவற்றைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை.
பெண்ணுறுப்பைக் குறிக்கும் பெயர் யோனி என்பது. உலகமே உயிர்களைப் பிறப்பித்தது. இவ் வண்டத்திற்கு அண்டயோனி என்ற பெயரும் உள்ளது.
ஒன்று என்பது பேச்சு வழக்கில் ஒண்ணு என்றும் ஒன்னு என்றும் வழங்கும். ஒன்றுதல் என்பது வினைச்சொல். ஒன்று என்ற ஏவல் வினையும் ஒன்னு என்றே இருந்துள்ளது.
இருவேறு பகுதிகள் போல் தோன்றி ஒன்றுபடுதலே ஒன்னு(தல்.)
இது பேச்சு வழக்குச் சொல்.
இது முதனிலை திரிந்த தொழிற்பெயராகும். எடுத்துக்காட்டு: படு .> பாடு. முதலெழுத்து நீண்டதாகிய திரிபு.
ஒன்னு > ஓனு : இது இடைக்குறையும் முதலெழுத்து நீண்டதும் ஆகும்.
ஓனு+ இ= ஓனி.
> ஓனி. > யோனி.
அகர வரிசைச் சொற்கள் சில யகர வரிசைச் சொற்களாக மாறும். எடுத்துக்காட்டு: ஆனை > யானை.
இதுபோலத் திரிந்ததே மேற்கண்ட சொல்லும்.
இதன் சொல்லமைப்புப் பொருள்: இருபகுதிகளாய் ஒன்றுபடும் உறுப்பு என்பதாம். இது பிறப்பு உறுப்பு ஆதலால் இதுவே ஆதிப் பொருள். பின் அண்டயோனி முதலிய சொற்கள் அதிலிருந்து அமைப்புற்றவை.
ஓனி என்ற முந்துவடிவம் வழக்கிறந்தது.
ஒன்+ து = ஒன்று.
ஒன்+ உ= ஒன்னு. ஒன் என்பதே அடிச்சொல். து என்பதும் உ என்பதும் விகுதிகள் ஆம்.
ஒன் > ஓன் > ஓனி என்றும் விளக்கலாம். இதுவும் மறுபக்க விளக்கம் ஆம்.
உலகத்து உயிர்கள் அனைத்தையும் பிறப்பித்தலால் இது பணிதற்குரிய இடத்தைப் பெற்று வழிபடு குறிப்பு ஆயிற்று, இந்துப் பற்று நெறியில்.
இவ்வுறுப்பு குறித்து எழுந்த சொற்களில் ஒன்றில் ஒன்றுபாடு கருத்தானது; இன்னொன்றில் பிளவுறல் கருத்தானது. இவ்வாறு மையப் பொருண்மையில் வேறுபாடுகள் உள. கூ என்ற எழுத்தில் தொடங்கும் இன்னொரு சொல் கூடுதல் ( ஒன்றுபாடு) என்னும் மையக் கருத்தினதே ஆம். இதில் டு என்பது வினையாக்க விகுதி. மூடு என்பதில் போல. பா> பாடு என்பதில் போல.
கூடு> கூடு+ பு + அம் > குடும்பம். இது முதனிலைக் குறுக்கம். தோண்டு> தொண்டை என்பதுபோல. சா> சவம் எனலும் ஆம்.
கூடு : கூடுதல். சேர்தல். கூடு என்பது குடு என்று குறுக்கம் பெற்ற காலை பு விகுதி வரின் குடுப்பு குடும்பு என்று இருவகையாகவும் வரும். இவற்றுள் சொல்லாக்கத்திற்கு குடும்பு என்ற மென்றகவே ஏற்புடைத்தானது. மகர ஒற்று புணரியலில் அல்லது சந்தியில் தோன்றியது. அம் எனல் இறுதி விகுதியாயிற்று. இச்சொல் குடும்பி என்று மாறுங்கால் இகரம் வர அம் என்னும் விகுதி களைவுறுதல் காண்க. குடுப்பு எனல் வலித்தல். குடும்பு எனல் மெலித்தல். குடுகுடுப்பை என்ற சொல்லில் வலித்தலே மேற்கொள்ளப்படுவதாயிற்று. சொல்லமைப்பில் எப்படி வந்தால் இன்னோசை தழுவும் என்பதும் எடுத்துக்கொள்ளப்படுவதே.
தமிழின் குகைக்கால அமைப்புக்குள் சென்று ஆராய்ந்தால் ஓரெழுத்து ஒரு சொற்களாய்ச் சீன மொழிபோல் தோன்றும். தீர ஆய்ந்தாலே தெரிவன இவை.