பரிதல் என்றால் விரும்புதல்.
ஒரு பேர்ரசர் தம் நாட்டினை எல்லாம் அவரே ஆளவேண்டுமென்று நினைத்தாலும் ஒரு சமையல்காரன்
எல்லாக் குழம்பு பச்சடி மேங்கறிகளையும் அவனே ஆக்கிமுடிக்க வேண்டுமென்றும் என்று முயன்றாலும் பலவேளைகளில் முடிவதில்லை. இதற்குத்தான் வேலைப்பளு என்று சொல்கிறோம். அத்தனை இடுகைகளையும் யாமே முயன்று எழுதினும் யாராவது
உதவி செய்தால் நலமாக இருக்குமே என்று சிலவேளைகளில் மனம் எண்ணுவதும் உண்டன்றோ?
விரும்பி (பரிந்து ) ஒரு பால் (பகுதி) யாரேனும் ஏற்றுக்கொண்டால்
கொஞ்சம் சுமை குறையும்........இப்படி எதிர்பார்த்தாலும் சுமைகள் விரிந்து கனத்துவிடுதலும்
உலகில் நடைபெறுவதுதான்.
விரும்பி ஒரு பால் மேற்கொள்கிற நண்பர் பரி- பால் ஏற்பதனால் அவர் பரிபாலனம் செய்கிறார் - அந்தப் பகுதியை அல்லது கடமையை மேற்கொள்கிறார். தோசையைப் பிய்த்துக் கொடுப்பது போல கடமையையும் பிச்சுப்பிச்சு (பிய்த்துபிய்த்துக்) கொடுக்கலாம்.
பரிபாலனம் செய்யலாம்.
பரிதல் என்ற சொல்லை முன்பே நன்றாக ஆய்ந்துள்ளோம்.
அறுத்தல் என்பதும் பொருள்.
கடமைகளை அறுத்து அறுத்துக் கொடுத்துச் செய்ய ஆணையிடலாம்.
கடமைகளை வெட்டிவெட்டிக் கொடுத்துச் செய்ய ஆணையிடலாம்.
பல பொருளுடைய சொல்லை பல பொருளொடும் கூட்டிப் பொருள் விரிக்கலாம்.
வெட்ட வெட்டப் பகுதிகள் பலவாகும்.
கடமைகளைக் கொடுப்பதும் கொள்வதும் பரி+பால்+ அனமே ஆகும்.
அனம் - அன், அம் இவற்றில் அன் இடைநிலை என்றும் அம் இறுதி
என்றும் கொள்ளலாம். இரண்டையும் விகுதி என்றாலும் ஒன்றை இடைநிலை
என்று இன்னொன்று விகுதி எனினும் சொல் அப்படித்தான் இருக்கும்.
நீங்கள் ஒரு செய்ல்புரிபவராக இருந்தால் பரி, பால், அன்-அம் செய்யுங்கள்.
திறம் மிக்குவரும்.
பால் என்றால் பகுதி. திருக்குறளுக்கு
முப்பால் என்றும் பெயர் உள்ளதே.
ஆண்பால் பெண்பால் என்றும் பகுதி சொல்வர்.
எளிய சொல்லே.
பரிதல் அகரவரிசைப் பொருள்ள்
வாங்கிக்கொள்ளுதல்.காதல்கொள்ளுதல், சார்பாகப்
பேசுதல் வருந்திக் காத்தல் பற்றுவைத்தல் ; ; இரங்குதல் ; ; வருந்துதல் ; பிரிதல் ; அறுதல் ; முறிதல் ; அழிதல் ; ஓடுதல் ;
வெளிப்படுதல் ; அஞ்சுதல் ; ; பகுத்தறிதல் ; அறிதல் ;
அறுத்தல் ; அழித்தல் ; நீங்குதல் ; கடத்தல் ; உதிர்த்தல் வெட்டுதல், துண்டுகளாக்குதல். கடிதல்.
பொருந்துவன அனைத்தும் பொருத்தலாம்.
மேலும் படிக்க:
மேலும் படிக்க:
http://sivamaalaa.blogspot.com/2017/12/blog-post_15.html
இத்தமிழ்ச் சொல்லைப் பல மொழிகள் மேற்கொண்டது
தமிழ்த்திறம் புலப்படுத்தும்.
இத்தமிழ்ச் சொல்லைப் பல மொழிகள் மேற்கொண்டது
தமிழ்த்திறம் புலப்படுத்தும்.