சனி, 9 செப்டம்பர், 2017

மறுவாழ்வு வேண்டிய உரோகிங்க்யர்.



இலக்கம்  இரண்டினைம் பத்தா  யிரமே

கலக்க மடைந்தவுரோ  கிங்க்யர்----நிலமகன்று

ஓடினர்மி   யன்மாரி  னின்றும் உயர்வாழ்வு

கூடுமோ கோதில் உலகு.


பொருள்:

இலக்கம்:  இலட்சம்;   ஐம்பத்தாயிரம் -  ஐம்பதினாயிரம்;
உரோகிங்க்யர் -  முஸ்லீம் அகதிகள்.   
கோதில் - குற்றமில்லாத.  உயர்வாழ்வு -  இங்கு மறுவாழ்வு
எனக் கொள்க.

பல்வேறு மதத்தினர் வாழ் நாட்டில், உம்முடன் நானிருக்க மாட்டேன் என்று விலக்கிக்கொள்வது, பின்  விளைவுகளை ஏற்படுத்திவிடும். சமய நல்லிணக்கம்  கடைப்பிடித்தல் நன்று.  உரோகிங்க்யருக்கு  நம் நல்லெண்ணம் உரித்தாகுக.

இந்தியாவின் கிழக்கிலும்  உரோகிங்க்யர் பலர் ஊடுருவியுள்ளனர் என்று
அமைச்சர் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.  அவர்களுக்கும்  இடம் காணப்பபடுதல்
தேவையாகிறது.  ஐ.நா அகதிகள் அதிகாரிகளும் அறிவித்துள்ளனர். இதற்கான "விடிவு"  அங்க்சான்சுய்ச்சி அம்மையாரிடம்  உள்ளதாகத் தெரிகிறது.  மியன்மார் சென்றுள்ள தலைமையமைச்சர் மோடி மறைவாகப் பேச்சு நடத்துவார் என்று தெரிகிறது.

வெள்ளி, 8 செப்டம்பர், 2017

ரத்து : விவாகரத்து (maணவிலக்கு)



ரத்து என்ற எங்ஙனம்  புனைவுண்டது என்பதை முன்னர் விளக்கியுள்ளேன. அந்த விளக்கக் குறிப்பினைத் தேடிக்கொண்டிருப்பதைவிட, தலையிலிருந்து தரைப்பலகைக்கு  floorboard  நேரடியாகச் சிந்தனையை  இறக்கிவிடலாம்.
இறுதல் =  முடிதல்.
இறு + து(விகுதி) = இறு + அத்து (சாரியை)  + து,
=  இறு + அத்(து)  + து  = இறத்து.    முடிவு என்று பொருள்.

இச்சொல் இறு என்பதில் தோன்றியது என்பதற்கு இது போதுமானது. இங்கு அத்து என்ற சாரியை வந்ததா அல்லது   புணர்க்குங்கால் ஓர் அகரம் தோன்றிற்றா என்ற வழக்காடுதல் தேவையில்லை.

அஃது  இலக்கணமே குறிக்கோளாய் நிற்பார் மேற்கொள்க.

இப்போது மன்நிறைவின்பொருட்டு, இது போலும் து-விகுதி பெற்றமைந்த
வேறு சில சொற்களைக் காண்போம்.

வரு + து  =  வரத்து   (போக்குவரத்து). இங்கு முதனிலை ஈற்றில் நின்ற உகர உயிர் அகரமாகி புணர்ச்சியில் ஒரு தகர ஒற்றுப் பெற்று ( த் )  சொல் அமைந்த்து.

விழு > விழுது:    இங்கு விகுதி புணர, அப்புணர்ச்சியில் ஒற்றுக்கள் எவையும்
தோன்றிற்றில.

கை + து =  கைது   ( இங்கும் எழுத்தெதுவும் தோன்றவில்லை ).

குரு + து =  குருத்து.  (  த்  தோன்றியது ).
இங்கு குரு என்பது பகுதி.  இதனை:க்   குருகு, குருந்தம்,  குருப்பு, குரும்பை, குருளை,  குருள்தல் முதலியவற்றால் அறியலாம்.  குரு என்பதை வினையாகக் கண்டிலம்.  ஆதலின் அதை ஓர் உரிச்சொல் என்று கொள்ளுதல் வேண்டும்.

இதுகாறுங் கூறியவாற்றால்,  இறு > இறத்து போலும்  வடிவங் கொள்ளும் சொற்கள் உள என்பது பெறப்படும்.

இறத்து என்பது பின் அடைந்த திரிபுகளாவன:

இறத்து >  இரத்து  > ரத்து.(headless)

இறுதல் என்பது முடிதல் என்று பொருள்படும் ஆதலின், ரத்து என்பதும்
அப்பொருளையே அடைந்தது.

இதிலிருந்து  விவாகரத்து   (  மணவிலக்கு ) முதலிய கூட்டுச் சொற்கள் தோன்றின.

பிற்குறிப்பு:

விவாகம் என்பது முன்னரே விளக்கப்பட்ட சொல்: அதைச் சுருக்கமாக இவண் குறிப்பிடுவோம்.  வி = விழுமிய;  வா=  வாழ்க்கைக்கு ;  (ஆகும்) > ஆகம்: ஆகும் வழி.  ஆகு+ அம் = ஆகம்.   விவாகமானது இல்லற வாழ்வில் ஆடவர் பெண்டிரை இருத்தி விழுமிய வாழ்வினை ஆக்கும் ஓர் முக்கிய நிகழ்ச்சி ஆகும்,

விவா என்ற இலத்தீனும் தமிழிலிருந்து பெறப்பட்டது.

 


வியாழன், 7 செப்டம்பர், 2017

மலேசியா சாபா : வெஸ்ட்லேக் லிம்பாங்கில் பிடிபட்ட பெருமுதலை

http://www.thestar.com.my/news/nation/2017/09/03/giant-crocodile-caught-in-limbang/~/media/4ad0eb62ad554bdabb196471bfd242aa.ashx

http://www.thestar.com.my/news/nation/2017/09/03/giant-crocodile-caught-in-limbang/~/media/4ad0eb62ad554bdabb196471bfd242aa.ashx

இந்தப்  பிடிபட்ட பெருமுதலையின் படத்தை  மலேசிய ஸ்டார் தாளிகைப் பக்கத்தில் கண்டுகளிக்க, மேற்கண்ட தலமுகவரியைச் சொடுக்கவும்.

இதைப்பற்றி மகிழ்ச்சியாக யாமெழுதிய சில வரிகள் நீங்கள் பாடிக்களிப்பதற்கு:



நாடிவந்    தொருமுதலை ---  அந்த
நகரத்துக்  கடையினுள் புகுந்ததுவே;
ஓடிவந்  திட்டவர்க்கு  -- கிடைத்த
ஒருபெரும் களிப்புறு திருநாளதே.

ஆற்றிலும் கடலிலுமே  --- மனிதரை
அண்டா திருந்த வாழ்க்கையிலே,
ஆற்றவும் சலிப்பானதே --- அதை
மாற்றி அமைத்திட நகர்சென்றதே.

பத்தடியின் நீண்டது  --- மிகப்
பரியதென் றனைவரும் பார்த்தனராம்;
சுற்றித் தளைத்தனர்காண் --- அதைச்
சுருட்டி எடுத்தனர் வனம்செலவே.

மனிதநே யம்மிக்கதால் --- இந்த
மாநகர் மக்களோ டிருக்கவந்தேன்;  
எனக்கும் விடிவில்லையோ -- முதலை
இப்படிக் கலக்க  முடன்சென்றதே. 

இது முதல்போட ஒப்பாத முதலை.  அதனால் கடைப்பங்காளிகள்
ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.