ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

விமலா



விமலா என்பது அழகான ஒரு பெண்ணின் பெயர்
இப்போது இந்தப் பெயர் உள்ளவர்கள் பலர் உள்ளனர்.
கடுமை மிக்க இலக்கணம் படித்த புலவருக்குச் சில வேளைகளில் புரியாதுதான்.

சொற்களை எடுத்து வெட்டி ஒட்டிக் கட்டி அரைத்துக் குழைத்துk கரைத்து ஊற்றவேண்டும். இலக்கணத்துக்குள்ளேயே இருந்தால் எப்படிக் கண்டுபிடிப்பது. புதுச்சொற்களை உருவாக்கி விட்டு அதை உலகின் வேறு ஏதாவது ஒரு மூலையில் உள்ள ஒரு மொழியின் பெயரைச் சொல்லி அந்த மொழியினுடையது எனல்வேண்டும்.   அவனால் கண்டுபிடிக்க முடியாது.
இப்படி அருகில் உள்ளவனைச் சுற்றிவிடுவதும் ஓர் ஆன்ந்தம்தான்.  

னாம்@ அதைக் கண்டுபிடிக்க முயன்று அல்லல் படுகிறோம்.  

விழு மலர் என்றால் விழுமிய மலர்; சிறந்த மலர்.
மலர் என்பதை மலா என்று மாற்றுக.
விழு என்பதில் ழுவை வெட்டி எறிக.
விமலா என்ற அழகிய சொல் கிடைத்துவிட்ட்து.
இப்படிப் பிற மொழியினரும் பெயர்களை அமைக்கிறார்கள்>
பெயரில் ஒரு நல்ல பொருளிருக்கவேண்டும் என்பது தமிழர் கொள்கை; இந்தியர் கொள்கையும்கூட.
நல்ல ஒலிநயம் போதும்;   கவர்ச்சி வேண்டும் என்று நினைப்போர் உலகில்
பலர்.
பெயர் அடையாளத்துக்கு இடப்படுவது.   இதில் பொருள்கண்டு என்ன செய்யப்போகிறாய் எங்கிறான் ஒருவன்.  அவனவனுக்கு அது அது சரி.

@ இது பின் திருத்தப்படும்.  எழுத்துருவாக்கி வேலை  செய்யவில்லை/


மோடியின் புதிய அமைச்சவை



உலகெலாம்  முன்செல  வேண்டும்; ---- இந்தியா
உன்னதம் பெற்றிடல்  வேண்டு;ம்;
பலகலை ஓங்கவும் வேண்டும் ---- மக்கள்
பலவும் திறம்பெற வேண்டும்.

பெண்கள் உயர்ந்திட வேண்டும் ---- அவர்கள்
பெரும்பொறுப் பேற்கவும் வேண்டும்;
என்பன போல்பல் கனாகள் ---  கண்டே
ஏற்றவை செய்பவர் மோடி.

தற்காப் பமைச்சினில் பெண்ணே  ----- இன்னும்
தக்க நிலைகளில் பெண்கள்;
இற்காப்  பளித்திடும் பெண்கள் ---  நாட்
டிற்காப் பளிப்போர் 1 திறவோர்.

மோடியும் மந்திரி  தாமும் ---  மக்கள்
முன்செலும் பெற்றியில் வாழ்க;
தேடிய  நன்மைகள் பெற்று -----  செல்வம்
திகழ்ந்திட இன்பமே சூழ்க.

----------------------------------------------------

1.  காப்பளிப்போர்   a missing consonant has been restored and error
                                rectified
   பொருள்:  பாதுகாப்பு அளிப்போர் ..

சனி, 2 செப்டம்பர், 2017

சாமானியம் என்னும் சொல்



சாமானியம்,  சாமானியர்.

மானுதல் என்பதன் பொருள்  ஒத்தல், மானல் (மான் + அல்) ஆகியவை.
ஒத்தல் என்பது ஒரு பொருளாதலின்,  இச்சொல் (எச்ச நிலையில்) ஓர் உவம உருபாக பண்டை இலக்கணங்களில் சொல்லப்பட்டுள்ளது.   இங்ஙனம்  வருங்கால்  இதற்குப் “போல”  என்பது பொருளாம்.
சாமானியம் என்ற சொல்லை ஆய்கையில், இப்பொருளே உதவுவதால் மானுதல் என்பதன் மற்ற பரிமாணங்களை இங்கு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டியதில்லை.
பண்டைக் காலத்தில் மனிதன் அவனுடைய செல்வச் செழிப்பையும் தொழிலையும் பொருத்தியே மதிக்கப்பட்டன். அவன் பயன்படுத்திய நெல், ஏனை உணவுப்பொருள்கள்(தானியங்கள்), மாடு கன்று என்பன அவற்றுட் சில.  அப்போதெல்லாம் செல்வம் உடையவன்   அஃது இல்லாரை மதிக்கவில்லை. ( இப்போதும் இல்லை, கவலை வேண்டாம்).  இதை மாற்ற அக்காலத்து அறிஞர்  பிறருக்குத் தருதல் (தருமம்)  உயர்ந்ததென்றும் வானவர் உலகு வழிதிறந்திடும் என்றும் போதித்துப் பார்த்தனர். ஆனால் அவர்கள் குறிப்பிடத்தக்க வெற்றியை அக்கால முழுவதும் அடைந்தார்களில்லை.  சில வேளைகளில் அவர்கள் கூறியது ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் ஏனைக் காலங்களில் மக்கள் அப் போதனை  போற்றவில்லை.  குமுகப் படிநிலைகள் (social stratification)  இவ் வுயரிய கருத்துக்களைக் கடைப்பிடியாமையினால் உருவாகின .
ஆகவே நன்மையும் தீமையும் ஒருங்கு தொடர்ந்தன.
பணமில்லாதவன் பிணம் என்ற பழமொழி  எழுந்தது.
ஒரு பாடல் இப்படி வருகிறது:
உள்ளபடி செல்வம் இல்லாதவரே
உலகினிலே இருப்பதும் தவறே;
கல்லார் எனினும் காசுள்ளவரைக்
காட்சிப் பொருளாய்க் காணார் எவரே?

ஒரு பழமொழி:

பணம் பந்தியிலே, குலம் குப்பையிலே.
 
உயிர்வாழ்க்கைக்கு ஆதாரம்   செல்வம். ஏழ்மை நடைப்பிணம் ஆக்கிவிடும்.
சாமானியர் என்றால் செத்தவரை ஒத்தவர் என்பது பொருள்.   மானியர் = ஒத்தவர்.  சா = சாவு, ஆகுபெயர் போல செத்தவனைக் குறிக்கிறது.
செல்வம் இல்லாதவன், செத்தவனை ஒத்தவன்.  சாமானியன்.   சாவை மானுகின்றவன்.  செத்தானை ஒத்து வீழ்ந்தவன்.  ஓர் கொடிய நிலையைக் காட்டும் இச்சொல்லைத் தமிழ்ச்சங்கம் போன்ற பண்டை அமைப்புகள் ஏற்றுக்கொண்டிருக்கமாட்டா.  எனினும் வறுமையின் கொடுமையைக் காட்டும் பல பாடல்கள் தமிழிலக்கியத்தில் உண்டு.   வறியோர்க்கு உணவளிக்க மணிமேகலை அட்சய பாத்திரம் ஏந்தினாள்.  கோவலன் கொலையுண்டதற்கும்  அவன் செல்வமிழந்தமையே காரணம்.  பொதுவுடைமைக் கருத்துகள் மார்க்சிடம் ( Karl Marx) எழுந்தமைக்கும் வறுமையே காரணம்.  இந்தச் சாமானியச் சொல் புனையப்பட்டதற்கும் வறுமையே காரணம்.  வறியோரைச் செத்தாரை ஒத்தார் என்*கிறது சொல்.  இதற்கு வேறு பொருள் கூறினால்  அது ஓர் இடக்கர் அடக்கல் இரகமே ஆகும்.

 Note (official use).

To edit.  Beware of auto-correct generated errors and redundant dots.