சொப்பனம் என்ற சொல்லுக்கு யாமெழுதிய
ஆய்வுரை இப்போது கிட்டவில்லை.
மனிதன் உறங்கும்போது, கனவு கண்டு, சில
சொற்களைப் பன்னுவதுண்டு. இது நன்றாக
ஒலிப்பதற்கும் உளறுவதற்கும் இடைப்பட்ட
ஒரு நிலையாகும். பன்னுதலாவது
பல முறை ஒன்றைத் தடுமாற்றத்துடன் ஒலிப்பது.
சொல்லைப் பன்னுதல் > சொற் பன்னம் . சொப்பனம்
என்று இது வந்தது.
இது பேச்சு வழக்கு. பின் திரிந்து பொருளும் சற்று மாறி,
"கனவு" என்ற பொதுப்பொருளில் வழங்கி வருகிறது.
இச்சொல்லுக்குச் சிவஞானபோதம் முதலிய நூல்கள்
வேறு பொருளை உரைப்பதுண்டு. ஆனால் அது தத்துவப்
பொருளாகும்.
சொப்பனம் என்பது சொற்பனம் என்றும் எழுதப்படும்.
சொற்பனம் என்பதே முந்துவடிவம் ஆகும்.
ஸொப்பனம், ஸ்வப்பனம், ஸொப்னம், ஸ்வப்னம்
என்று பலவாறு உருக்கொள்ளும் சொல் இதுவாகும்.
------------------------------------------------------------------------
Notes:
1.
சொப்பனம் என்பது ஆன்மா கழுத்தில் நின்று புலனுணர்ச்சிகள்
( acts of sense organs ) ஒடுங்கி எண்ணங்கள் ( mind ) ஓடும் நிலை
( சிவஞானபோதம் விளக்கம் )
More at:
https://sivamaalaa.blogspot.sg/2015/12/4.html.