வயிற்றுடன் வாழ்தல் அரிது.....
இப்படி நம் மூதாட்டி ஒளவையார் கருதினார்.
வயிற்றை இடும்பைகூர் என்வயிறே என்கிறார்.
மனித வரலாற்றின் எல்லா நடவடிக்கைகளிலும்
வயிறன்றோ முன் நிற்கிறது? வயிறு இல்லா
விட்டால் உழைக்கவும் வேண்டாம்! பொருள்தேடவும்
வேண்டாம்! எந்த நாட்டுடனும் எதற்கும் போரிடவும் வேண்டாம்....
பொருளியல் வரலாற்றை ஆராய்ந்தால் பல
போர்களுக்கும் பொருளே காரணமாய் இருந்
திருக்கிறது. குடிமக்கள் தொழிலுக்கே அனுமதி;
("குடிசைத் தொழில்" ) ;
வெளிநாட்டுப் பொருள்களை உள்ளே விடமாட்டோம்
என்ற கொள்கையைப் பின்பற்றியதால், சீனாவுக்கும்
இந்தியாவுக்கும் போர் வெடித்தது. உலகின் பல
நாடுகளையும் தம் வசமாய் வைத்துக்கொண்டு
பிற நாடுகளுக்கு வாய்ப்பு வழங்காமல் பிரிட்டன்
செயல் பட்டதனால் ( well, the sun does not set in the
British Empire : " Winston Churchill ) இந்த வளையத்தை உடைக்க
ஓர் உலகப் போர் யப்பானுக்கும் செருமனிக்கும் தேவையாகிவிட்டது.....எல்லாவற்றுக்கும்
சோறும் ரொட்டியுமே முக்கியக் காரணங்கள் ஆயின.
ஆற்று நீரை வழங்கி வளம் தந்திருந்தால் சோழன்
கரிகாலன் ஏன் போரிடவேண்டும்....சோறுதான்
மூலமென்று எண்ணிக்கொண்டு இனி
வரலாற்றைப் படியுங்கள்.
வயிறு என்பதற்கு இன்னொரு சொல் உதரம்
என்பது. உது: என்றால் முன் நிற்பது. எல்லாவற்றிலும்
வயிறே முன் என்று நாம் உரையாடினோம்.
வயிற்றுடன் வாழ்தல் அரிது. ஆகவே அரு என்ற
சொல்லுடன் அம் சேர்த்து, அரம் என்றாக்கி,
உது+ அரம் என்று இணைத்தால் உதரம் வருகிறது.
மனிதனுக்கு முன் நிற்கும் அரிய பொருள் உதரம்.
உது; அரு + அம். அரு என்பதில் உகரம் கெட்டது.