சனி, 27 மே, 2017

BEEF EATING POPULATIONS

இது  மாட்டிறைச்சி உண்ணல், இந்தியாவின் நிலைமை பற்றிய  இந்து
தாளிகையின் ஓர் ஆய்வு ஆகும்.  படித்து இன்புறுவீர். தமிழ் நாடு மாநிலத்தில் இவ்வுணவுக்குத் தடை இல்லை என்று தெரிகிறது.

http://www.thehindu.com/news/national/‘More-Indians-eating-beef-buffalo-meat’/article16085248.ece



வியாழன், 25 மே, 2017

நிமையம் for minute.

இன்று நிமிடம் என்ற சொல்லை ஆராய்வோம்.

நிமை என்பது இமை. கண்ணின் இமை.  ஒருமுறை இமைகளை மூடித்
திறப்பதற்கும் அடுத்தமுறை அதைச் செய்வதற்கும் இடைப்பட்ட நேரத்தையே நிமிடம்  என்றனர்.  நிமை இடு அம் என்பவை இணைந்து
நிமிடம் ஆயிற்று. நிமை என்பதில்  ஐ கெட்டது. நின்ற மிச்சம்
நிம்.
இதனோடு இடு சேர்க்க, நிமிடு.  அம் விகுதி வர, டுவில் உள்ள  உகரம்
கெட்டது. ஆக,  நிம்+இட்+அம் ஆகி, நிமிடம் ஆனது.

இதை இப்படி விளக்க தொல்லைப்பட வேண்டியிருப்பதால், நிமையம்  என்னும் புதிய சொல் படைக்கப்பட்டது.

மினிட் என்பதை நிமிடம் என்றோ நிமையம் என்றோ சொல்லலாம்.

பிரபஞ்சம். = உலகம்


பிரபஞ்சம். இதன் பொருள் உலகம் என்பது. என்ன அழகான சொல். ஆனால் இது ஒரு பிற்காலப் புனைவு. குமரிகண்டத்துச் சொல் அன்று.
அதன் பின் உண்டாக்கப்பெற்று அழகாகத் தோன்றுவதாகும்.

பிறப்பு அஞ்சு. அஞ்சு என்றால் ஐந்து. ""க்கு ""வும் "து"வுக்குச் "சு"வும் வந்தன. பார்த்தீரா. இது சிற்றூரான் பேச்சுச் சொல். பிறப்பு என்பது இயல்பான தமிழ்ச்சொல்தான். இதிலென்ன விந்தை (மேஜிக்)?

பிறப்பஞ்சு? நிலம், தீ, நீர், வளி, விசும்பு ஆக ஐந்தும்தாம் முதலில்
கடவுளால் படைக்கப்பட்டன. ஆகவே பிறப்பஞ்சு என்பது ஓருண்மை.
நம்பான் கடவுள் எங்கே படைத்தார் என்பான். பாலில் நெய் தெரிகிறதா?
அது விரிக்கப் பரக்கும் ஆதலின், விட்டுவிடுவோம்.

பிறப்பஞ்சு > பிறபஞ்சு > பிறபஞ்ச!!

சொல்லில் வலிக்கும் பகர ஒற்றை எடுத்துவிட்டால் பிறபஞ்சு என்றாகும். இறுதியில் நிற்கும் உ‍~வைத் தூக்கி எறிக. அதற்குப்பதில் ஒரு அ‍~வை இடுக. இப்போது மீதமிருப்பது பிறபஞ்ச.

இனி என்ன? வேலை முடிந்துவிட்டதோ? இல்லை. சொல்லை
அழகுறுத்த (பாலிஷ்போட‌) வேண்டும்.

பிறபஞ்ச >பிரபஞ்ச + அம் > பிரபஞ்சம்.

சிறு சிறு வனைவுகள்தாம். குயவன் பானை வனைதல் போல.

அழகான சொல் கிடைத்திருக்கிறது.

ப்ரபஞ்சமெல்லாம் பெய்யே என்பது ஒரு பழைய திரைப்பாட்டு.

பிரபஞ்சம் என்பது தமிழன்று. பிறப்பு: செந்த‌மிழ்; அஞ்சு : பேச்சு
த்தமிழ்; ஆகவே பிறப்பஞ்சு என்றால் செந்தமிழும் பேச்சுத்தமிழும் கலந்த கலவை. அதைப் பின்னும் செதுக்கியும் பிதுக்கியும் பிரபஞ்சம் என்பது கொடுந்தமிழ். பின்னும் ப்ரபஞ்ச என்பது பாகதப்பாணி. கொடுந்திரிபுகளால் செந்தமிழ் என்ற நிலையைக் கடந்துநிற்பது.


இயற்சொல், திரிசொல், வடசொல், திசைச்சொல் என
இவையனைத்தும் செய்யுள் ஈட்டச்சொற்கள் என்பார்
தொல்காப்பியனார். இவற்றுள் வடசொல் என்பது:

வடம்: கயிறு,  ஆலமரம்,  ஊர், வட்டம் என்று பொருள்.
வட்டாரத்தில் ஆலமரத்தடிகளில் மந்திரமொழியானது
வடமொழி எனப்பட்டது. வடமரமென்பது  ஆலமரம். தமிழ்
நாட்டின் வடக்கில் வழங்கிய மொழி என்றும் பொருள்படும்.
சமஸ்கிருதம் வடக்கில் மட்டும் வழங்கியதன்று. தெற்கிலும்

வழங்கிற்று. சமஸ்கிருதத்தைச் சங்கதம் என்பதே சரி.

வடமென்பதற்கு  ஏன் வட்டம் என்ற பொருள் உண்டு என வினவின்,
வட்டம் என்பதில் டகர ஒற்று எடுக்கப்பட்டால் வடம் என்று இடைக்குறை ஆகிவிடும். செய்யுளில் வட்டமென்பதை வடமென்றும்
பயன்பாடு கொள்ளலாம். எதுகை மோனை நோக்கிச் செய்வர்.

வடத்தடியில் கிளக்கப்படுவது வடசொல் ஆகும்.


You may be able to get more information from:   http://sivamaalaa.blogspot.com/2015/12/blog-post_10.html

Also see:https://sivamaalaa.blogspot.sg/2015/10/etc.html
;