எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் மேல் ஊழல் மற்றும் வருமான வரிச்
சட்டங்களின்கீழ் விசாரணையைப் பாய்ச்சுவதென்பது, மக்களாட்சியில்
எதிர்க்கட்சிளை ஒடுக்குவதென்று சில நாடுகளில் கூறுகிறார்கள். இதை
ஒத்துக்கொள்ள முடியவில்லை. எந்தக் கட்சியாயினும், விசாரிக்கவேண்டி நேர்ந்தபோது துவளாமல் விசாரிப்பதே சரியாகும். எதிர்க்கட்சிகளை விசாரிக்கக்கூடாது என்றால், அவர்கள் குற்றங்களில்
ஈடுபடும்போது விசாரிக்க இயலாமற் போய்விடுமே. அப்புறம் என்ன
சட்டம், என்ன நீதி? அதைப்பற்றிய கவிதை இது:
தூணாவர் மக்களாட்சிக் கெதிர்க்கட்சி என்று
தோன்றியதோர் தூயகருத் தொலித்திடுவர் நாட்டில்:
மாணாத செயல்களினால் மனம்கெட்டு மாட்டி
மக்கள்தரு ஆதரவை மாயுறுத்தும் காலை,
ஓணான்போல் பார்த்தபடி உட்கார்ந்தி ருக்க
ஒல்லுவதோ அரசினர்க்கு? கொள்ளாமை கண்டு
நாணாமல் அவர்களையே ஞாயமன்றில் ஏற்றல்
நல்லரசு எந்தநாளும் செல்லுவழி ஆமே.